Latest News
Home / abiraj (page 5)

abiraj

அறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரை- விவசாய திணைக்களத்தின் அறிவுரைகளை பின்பற்றாமையே காரணம் என்கிறார் நெற்பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ.பெரோஸ்…

வி.சுகிர்தகுமார்   அறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரையாகி வருவதனால் அம்பாரை மாவட்ட விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எந்தக்களை நாசினிக்கும் கட்டுப்படாத இப்பூச்சியானது விரைவாக வயல் நிலங்களை தாக்கிவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதேநேரம் யானைகளின் ஊடுருவலாலும் விவசாய நிலங்கள் அழிவடைந்து செல்வதாகவும் நாளாந்தம் யானைகளின் தாக்கத்திலிருந்து வயல்நிலங்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.அம்பாரை மாவட்டத்தில் 63000 ஆயிரம் …

மேலும் வாசிக்க

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக அமையலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள்  கூறியுள்ளனர். இந்நிலையில் …

மேலும் வாசிக்க

கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

மெல்பேர்ன் டெஸ்ட்டின் திருப்பு முனை – ரகானேவைப் புகழ்ந்த பயிற்சியாளர்

மெல்பேர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரகானே போராடி சதமடித்தது தான் அப்போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் …

மேலும் வாசிக்க

ஜனவரி மாத நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். …

மேலும் வாசிக்க

கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் அவிசாவெலப் பகுதியில் 29 பேர், அளுத்கடை பகுதியில் 28 பேர் மற்றும் மட்டக்குளி பகுதியில் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அத்தோடு, கொள்ளுப்பிட்டி பகுதியில் 22 பேர், பொரளை பகுதியில் 20 பேர் மற்றும் கொம்பனி வீதியில் 15 பேர் தொற்றாளர்களாக …

மேலும் வாசிக்க

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,  பைலட் திட்டத்திற்கு …

மேலும் வாசிக்க

‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளை கொள்ளாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு …

மேலும் வாசிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்த பந்து வீச்சாளராக அஸ்வின் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த சாதனையை பதிவுசெய்தார். அஸ்வின் இதுவரை 192 இடது கை துடுப்பாட்ட …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சுரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 396 ஓட்டங்களை …

மேலும் வாசிக்க