Latest News
Home / abiraj (page 30)

abiraj

பளை பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் ஆணொருவர் இனந் தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, செம்பியன்பற்று வடக்கு மாமமுனைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து …

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் …

மேலும் வாசிக்க

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. அத்துடன், தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 160 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், …

மேலும் வாசிக்க

உலக அளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் 100ஆவது இடத்திற்கு வந்தது இலங்கை!

நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 788ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது. …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் காபிஷன்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் காபிஷன் இன்று (14.11.2020) சனிக்கிழமை தனது 20வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் காபிஷன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் காபிஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு …

மேலும் வாசிக்க

ஊக்குவிக்க எவரும் இன்றி அல்லற்படும் தமிழ் அரசியல் கைதிகள்- கஜேந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் நீரிழிவு உள்ளிட்ட பல தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வயது முதிர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். சிறைச்சாலைகளில் …

மேலும் வாசிக்க

யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!

யாழிர் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், …

மேலும் வாசிக்க

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்கும் நடவடிக்கை- செல்வம் எம்.பி. வேண்டுகோள்!

  கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொடர்பாகவும் கரிசனை கொள்ளவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு புதைப்பதற்கு எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அப்பால் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலோ கொரோனா கிருமி பரவும் வகையிலாக மக்கள் அச்சம் கொள்ளும் …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதேபோன்று இன்று காலை 3.50 மணியளவில், ஜப்பான் நரிட்டோவிலிருந்து 16 இலங்கையர்கள், இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான …

மேலும் வாசிக்க