Latest News
Home / abiraj (page 20)

abiraj

கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் – சுமந்திரன்!

திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் …

மேலும் வாசிக்க

400 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நீதி அமைச்சை உலக வர்த்தக மையத்திற்கு மாற்ற ஏற்பாடு

அடுத்த ஆண்டு முதல் 400 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நீதி அமைச்சை, உலக வர்த்தக மையத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உலக வர்த்தக மையத்தின் 35,071 சதுர அடி பரப்பளவு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரை அமைச்சிற்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. கருவூலம் ஏற்கனவே 233,086,544 மற்றும் 174,075,701 ரூபாய்களை முறையே அடுத்த ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான …

மேலும் வாசிக்க

நிக்கோஸ் சதம்: மே.தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் நியூஸி. சற்று தடுமாற்றம்!

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில், கெய்ல் ஜேமிசன் 1 ஓட்டத்துடனும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காது 117 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். வெலின்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய …

மேலும் வாசிக்க

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்!

2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளநிலையில், இத்தொடரில் விளையாடும் தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், சரேல் எர்வி, க்ளெண்டன் ஸ்டூர்மன் மற்றும் கைல் வெர்ரெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதன் மூலம் டெஸ்ட் அறிமுகத்தை …

மேலும் வாசிக்க

எச்.ஐ.வி.க்கு சாதகமான முடிவினை காண்பித்த கொரோனா தடுப்பூசி சோதனை: அவுஸ்ரேலியா அதிர்ச்சி!

அவுஸ்ரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி.க்கு சாதகம் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலிய பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆண்டிபாடிஸ், எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியதால் 4இல் ஒருவருக்கு எச்.ஐ.வி. சாதகம் என போலியான முடிவுகளைக் காட்டியது. 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் …

மேலும் வாசிக்க

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 570 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 ஆயிரத்து 636 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும்  பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் …

மேலும் வாசிக்க

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 197 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமான வெளிநாடுகளில் சிக்கி தவித்த 197 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 78 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 12 பேரும் இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள். இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு …

மேலும் வாசிக்க

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்விநியோகத்தடை இன்று (வெள்ளிக்கிழமை) அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இன்று இரவு 10 மணிமுதல் கொழும்பு நகரின் டீன்ஸ் வீதி, டார்லி வீதி மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட இருக்கின்றது. அதேபோன்று வோக்‌ஷோல் வீதி மற்றும் இப்பன்வல சந்தி முதல் கொம்பெனித்தெரு வரையிலான பகுதிகளில் …

மேலும் வாசிக்க