Latest News
Home / abiraj (page 2)

abiraj

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர மேற்கு, பெல்ஹேன மற்றும் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுகள். களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் மதுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட …

மேலும் வாசிக்க

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் பப்பாசிச் செய்கை அழிவு!

வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய கனமழை மழை பெய்தது. இந்நிலையில், வவுனியா அரபாத் நகர் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த ஒரு ஏக்கர் அளவிலான பப்பாசிச் செய்கையே முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது …

மேலும் வாசிக்க

சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டதுடன் கொரோனா பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டுவரப் பிரார்த்திக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிராக 800 தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 800 தகவல்களையே சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் முன்வைத்துள்ளார். இந்தத் தகவலை, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியும் அரச சட்டவாதியுமான நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க

வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ். மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள் …

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 56 இலட்சத்து 42ஆயிரத்து 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 670 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஜேர்மனியில் 34 இலட்சத்து 12 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20 ஆயிரத்து 141 …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல் – ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு!

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும். வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும். ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அரச ஊழியர்கள், …

மேலும் வாசிக்க