Latest News
Home / உலகம் (page 52)

உலகம்

காஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்!

காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லி மாணவி ஒருவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத் மத்திய அரசுக்கு எதிராகவும், இராணுவத்திற்கு எதிராகவும் பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவரை தேச துரோக சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞரான அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா …

மேலும் வாசிக்க

ஹொங்கொங் எதிர்ப்பு பேரணிகள் அமெரிக்க – சீன வர்த்தகத்தை பாதிக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய திருத்த சட்டமூல விவகாரத்தில் சீன அரசாங்கம் வன்முறையை கையாண்டால் அது அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் தீர்மானித்திருந்தது. கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை முழுமையாக ரத்து …

மேலும் வாசிக்க

தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஏ.எவ்.பி செய்திசேவை நிறுவனம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இடம்பெற்ற திருமண விருந்தின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் உயிரிழந்திருந்ததுடன், 182 பேர் காயமடைந்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்வின்போதே இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் …

மேலும் வாசிக்க

வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரச படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. இதன்காரணமாக தலிபான்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தின் பசந்த்கோட் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலிபான்களை குறிவைத்து விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் …

மேலும் வாசிக்க

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சென்ற விமானம் நேட்டோ விமானத்தால் இடைமறிப்பு!

ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, குறித்த விமானத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியாவின் வான்பரப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பயணித்த விமானம் கடந்து சென்ற போது, நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக போர் விமானம் ஒன்று இடைமறித்தது. அத்துடன், அந்த விமானத்தை தாக்குவது போன்று அச்சுறுத்தும் விதமாக மிகவும் …

மேலும் வாசிக்க

சீனாவைத் தாக்கிய லெகிமா சூறாவளி 33 பேர் பலி

சீனாவை தாக்­கிய லெகிமா சூறா­வ­ளியில் சிக்கி குறைந்­தது 22 பேர் பலி­யான­துடன் மேலும் பலர் காணாமல் ­போ­யுள்­ளனர். அத்­துடன் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் தமது வீடு­வா­சல்­களை விட்டு வெளியேறும் நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர். சூறா­வ­ளியின் விளை­வாக இடம்­பெற்ற மண்­ச­ரிவின் கார­ண­மா­கவே உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இந்த சூறா­வ­ளியால்  தாய்­வானுக் கும் சீனாவின் ஷங்காய் நக­ருக்­குமி ­டை­யி­லுள்ள வென்லிங் பிராந்­தி­யத் தில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை கடும் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்ளது. இந்­நி­லையில் …

மேலும் வாசிக்க

ஏடன் மோதல்கள்: இதுவரை 40 பேர் உயிரிழப்பு 260 பேர் காயம் – ஐ.நா.

யேமனில் பல நாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 260 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தலைநகர் ஏடனில் இடம்பெற்றுவரும் மோதல் சம்பவங்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுடன் பல நாட்கள் இடம்பெற்ற மோதலின் பின்னர், யேமன் பிரிவினைவாதிகள் துறைமுக நகரமான ஏடனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக இராணுவ …

மேலும் வாசிக்க

4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

ஜப்பானில், பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம், 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை …

மேலும் வாசிக்க

துப்பாக்கிப் பிரயோக எதிரொலி : வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடைசெய்ய மக்கள் கோரிக்கை!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் விளைவாக அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ உள்ளிட்டவற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் அந்த பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன. கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாஸோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த …

மேலும் வாசிக்க