Latest News
Home / உலகம் (page 50)

உலகம்

மெக்சிகோவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து : 9 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் ரயிலில் சிக்கிய பஸ் வண்டி, நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. பஸ்ஸில் நசியுண்ட பயணிகளை பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்ஸின் …

மேலும் வாசிக்க

இரண்டாம் உலகப்போரின் வீசப்பட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது!

இரண்டாம் உலகப்போரின் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. தென்முனைக் கடல் பகுதியில் சில ஆய்வாளர்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பலை ஆராய்ச்சி செய்த போது, அதில் 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட வெடிகுண்டு கப்பலுக்கு வெகு தொலைவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக வெடித்துச் சிதறிய குறித்த வெடிகுண்டு சுமார் 900 …

மேலும் வாசிக்க

பாகிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பாகிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு – டெல்லியிலும் அதிர்வு கிழக்கு பாகிஸ்தானில் உணரப்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சிறார்கள் உட்பட 22 பேர் …

மேலும் வாசிக்க

நான்கு கால்கள், மூன்று கைகளுடன் பிறந்துள்ள ஆண் குழந்தை

இந்தியாவில் ராஜஸ்தானின்  மாநிலத்தில் நான்கு கால்கள், மூன்று கைகள் மற்றும் இரண்டு பாலுறுப்புகளுடன்  குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ராஜஸ்தானின் டோங்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில்  கடந்த வெள்ளியன்று 24 வயதுடைய ராஜு என்ற பெண்ணே ஒட்டிப்பிறந்த இரட்டையரை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இவ்வாறு ஒட்டிப்பிறந்துள்ளன. ஆண்குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், பெண்குழந்தையின் கால்கள், ஒரு கை மார்பு மற்றும் அடிவயிறு  ஆண்குழந்தையின் உடலுடன் ஒட்டியநிலையில் …

மேலும் வாசிக்க

கடைக்குள் நுழைந்த திருடன் – விரட்டியடித்த சிறுமி

கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடனை 11 வயது சிறுமி விரட்டியடித்துள்ள காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் நகரிலுள்ள கடை ஒன்றினுள் கடந்த 16ஆம் திகதி இரவு கையில் கத்தியுடன் திருடன் நுழைந்துள்ளான். அப்போது தந்தையுடன் குறித்த கடைக்கு சென்றிருந்த 11 வயது சிறுமி ஒருவர் அந்த திருடனின் முகத்தில் அங்கிருந்து பக்கெட்களை வீசித் தாக்கியுள்ளார். சிறுமியின் தீடீர் தாக்குதலினால் திணறிய அந்த திருடன் உடனடியாக அங்கிருந்து தப்பி …

மேலும் வாசிக்க

அவுஸ்திரேலிய காலநிலை மாற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தர்ஜினி சிவலிங்கம்!

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கணை தர்ஜினி சிவலிங்கமும் பங்கேற்றுள்ளார். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலை மாணவர்களும் இன்று காலை …

மேலும் வாசிக்க

விக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி

சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் நடிகர் பிரெட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல ஹொலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த ‘AD ASTRA’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், குறித்த திரைப்படத்தில் அவர் விண்வெளி வீரராக நடித்துள்ளார். இந்த நிலையில் ‘அட் அஸ்ட்ரா’ திரைப்படத்தின் விளம்பரத்துக்காக வொ‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு …

மேலும் வாசிக்க

அமெரிக்காவுடனான முழுமையான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்கா தங்கள் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை தொடுக்குமாயின் அவை அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் எரிபொருள் சுத்திரிப்பு மற்றும் மசகு எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஈரான் அமெரிக்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் எரிந்து நாசமானது. …

மேலும் வாசிக்க

சவுதி இளவரசிக்கு பத்து மாதங்கள் சிறை தண்டனை!

சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salman இன் சகோதரியான இளவரசி Hassa bint Salman இற்கு 10 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரிஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை ஒளிப்படம் எடுத்ததாகக் கூறி தனது காலில் முத்தமிட வைத்ததாக சவுதி இளவரசிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு 10 மாதங்கள் …

மேலும் வாசிக்க

கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட 10 உலக நாடுகள்!

உலகளவில் மிகவும் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக எரித்ரியா முதலிடம் வகிக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக வடகொரியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலும் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எரித்ரியா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைப்பாவைகளாகவே செயல்படுகின்றன. குறித்த நாடுகளுக்கு வெளியே இருந்துதான் சுதந்திரமாக ஏதேனும் பேசமுடியும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு நேற்று …

மேலும் வாசிக்க