Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
உலகம் – Page 49 – Website of Alayadivembu
Latest News
Home / உலகம் (page 49)

உலகம்

மாலி தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்!

மாலியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. மாலியின் Menaka பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சோதனை சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் இராணுவ வாகனம் ஒன்று …

மேலும் வாசிக்க

மயக்கத்திலிருப்பவரை வல்லுறவிற்கு உட்படுத்துவது குற்றமில்லையா-? ஸ்பெயின் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது என சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பார்லோசினாவின் வடமேற்கில் உள்ள மன்ரெசா என்ற நகரில் 2016 இல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலையொன்றில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை 14 வயது யுவதி  போதைப்பொருளையும் மதுவையும் …

மேலும் வாசிக்க

அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்ய ருவிற்றர் தீர்மானம்

உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ருவிற்றர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுபோன்ற செய்திகள் விற்பனைக்குரியவையல்ல என ருவிற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய விளம்பரம், வணிக விளம்பரதாரர்களுக்கு நம்பமுடியாத சக்திவாய்ந்ததாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும், அந்த சக்தி அரசியலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களைக் கொண்டுவருகிறது என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெக் டோர்ஸி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ருவிற்றர் நிறுவனத்தின் சமூக ஊடக போட்டி  நிறுவனமான பேஸ்புக் …

மேலும் வாசிக்க

சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!

மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக …

மேலும் வாசிக்க

போர்வெல் மூலம் 3 துளைகள் – புது திட்டம் மூலம் தொடரும் மீட்புப்பணி!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 68 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்து வருகிறது. ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 45 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து குழி தோண்டப்படும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ரிக் இயந்திரத்தால் பாறைகளை …

மேலும் வாசிக்க

அமெரிக்க படை நடத்திய தாக்குதில் ISIS தலைவர் பலி!

சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகிறது. சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது படையில் பாதியை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதன்பின் சிரியாவில் குர்து படைகளுக்கும் துருக்கி படைக்கும் இடையில் சண்டை நடந்தது. இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பு வேகமாக வளரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் புதிய …

மேலும் வாசிக்க

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வகித்து வந்தார். அண்மையில் அமேசான் நிறுவனம் 3ஆவது நிதி காலாண்டில் பங்கு சந்தையில் 7 பில்லியன் டொலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது. அதேநேரம் அமேசான் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Douglas County பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அத்துடன், கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியே செல்வது ஆபத்தானது என கூறப்பட்டு வரும் நிலையில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன், மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி …

மேலும் வாசிக்க

உலகிலேயே மிக நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை

உலகிலேயே முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை இன்று (சனிக்கிழமை) முதல் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக இந்த விமான சேவையில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 …

மேலும் வாசிக்க

விண்வெளி வீராங்கனைகள் சரித்திர சாதனை!

விண்வெளி வீராங்கனைகள் இருவர் சரித்திர சாதனை படைத்துள்ளனர். விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் ஆகிய ஜோடி விண்வெளியில் நடந்த முதல் பெண் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் மின்சாரம் வழங்கும் சூரிய ஒளித் தகடுகளில் ஏற்பட்ட கோளாறினை சரிசெய்யும் பணியில் இந்தப் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெளியே …

மேலும் வாசிக்க