Latest News
Home / உலகம் (page 30)

உலகம்

நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் புதிதாக மூன்று இலட்சத்து 7,930பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இறுதியாக செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்று இலட்சத்து 6,857பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்கு பின்னர், நேற்றைய நாளிலேயே அதிகமான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேஸில் …

மேலும் வாசிக்க

ரஷ்ய கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்

கொரோனா வைரஸை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுப்பதற்காக ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட …

மேலும் வாசிக்க

பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!

லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. …

மேலும் வாசிக்க

ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்

ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க ஜனாதிபதி …

மேலும் வாசிக்க

குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கை!

குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நிறுவனங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வடிவங்களுடன் கசக்கிப் பைகளில் கைச் சுத்திகரிப்பான்களை பொதியிடுகின்றன. கசக்கிப் பைகள் பொதுவாக பழ ப்யூரி தின்பண்டங்கள் அல்லது குழந்தைகளுக்கான சாறுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கண்காணிக்கப்படாவிட்டால், சில குழந்தைகள் ஆல்கஹால் சார்ந்த தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியைப் பற்றி எளிதில் குழப்பமடையக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

ஜப்பானின் 10 மாகாணங்களில் 5.5 மில்லியன் மக்களை வெளியேறுமாறு பரிந்துரை

சூறாவளி அச்சம் காரணமாக தென்மேற்கு ஜப்பானில் நான்கு மாகாணங்களில் 810,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் 10 மாகாணங்களில் உள்ள 5.5 மில்லியன் மக்களை வெளியேறுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சூறாவளியானது ஞாயிற்றுக்கிழமை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இதனால் கனமழை, புயல் மற்றும் மணிக்கு 100 மைல் (160 கிமீ / மணி) வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பகுதியில் தாக்கிய பலமான …

மேலும் வாசிக்க

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பின்னர் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் …

மேலும் வாசிக்க

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா: 56 இந்து நாடுகளோடு வர்த்தகம்!

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை சாமியார் நித்யானந்தா இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அத்துடன், இந்த பணப் பரிமாற்ற முறையில் உலகிலுள்ள 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்யள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி வங்கி, பணப்பரிமாற்று என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியான இன்று அதை முறையாக …

மேலும் வாசிக்க

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. …

மேலும் வாசிக்க

ஜிமெயில்- கூகுள் டிரைவ் பயன்பாட்டில் தொழில்நுட்ப கோளாறு: பயனர்கள் புகார்

உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்மைய, ஜிமெயிலில் இணைப்புகளை அனுப்பும்போது பல சிக்கலை எதிர்கொள்வதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூகுள் அப்ளிகேஷன் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. …

மேலும் வாசிக்க