Latest News
Home / உலகம் / அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அமெரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவுகளின் பிரகாரம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடந்த ஜூலை மாதத்திற்கான தேர்தல் செலவீனமாக 64.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதியும் தற்போதைய ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடனின் ஜூலை மாத தேர்தல் செலவீனமாக 59.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை மாத நிறைவுப் பகுதி வரையிலான ஜோ பைடனின் ஒட்டு மொத்த செலவீனமாக 98.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *