Latest News
Home / இலங்கை (page 21)

இலங்கை

திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன கடந்த (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் சிரேஸ்ர ஆசிரியர்.A.L. பத்திமா சிபா ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (40) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் …

மேலும் வாசிக்க

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் !

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் …

மேலும் வாசிக்க

நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆயித்தியமலை மட்/ நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன 20/05/2023 இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வசிக்கும் ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளர் வழங்கி இருந்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் …

மேலும் வாசிக்க

நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !!

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் 59 டெங்கு அபாய பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு …

மேலும் வாசிக்க

தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வாபஸ்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்க்கப்பட்டுள்ளன. 32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது, நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெற்றதாக அரச வழக்கறிஞர் …

மேலும் வாசிக்க

சுமந்திரன் எம்.பியை மறைமுகமாக தாக்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன்!

யாழ்ப்பாணத்தில் ஓர் இனம் வெளியேற்றப்பட்டது, அதற்கு இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது எனக் கூறத் தயங்குகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – அம்பாறை இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வின் …

மேலும் வாசிக்க

சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம் அறிவித்தல் விடுத்ததா வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்களில் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினரின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு….

மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினால் இவ் வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான கணிதம் மற்றும் வரலாறு படங்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு கமு /சது றாணமாடு இந்து கல்லூரியில் தினாகரம்பிள்ளை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கமு /சது றாணமாடு இந்து கல்லூரி , மட்/ பட் மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (13ம் கிராமம்), கமு/சது வாணி மகா வித்தியாலயம் …

மேலும் வாசிக்க

பால்மாவின் விலை 200 ரூபாயினால் குறைப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிலோ பால்மாவின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலை அடுத்து பால் மாவின் விலையை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து நிதியமைச்சு பேச்சு !

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன் விலைகள் குறைவாக காணப்படுவதனால் கலால் வரி வருமானத்தில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் திறைசேரிக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது. உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க …

மேலும் வாசிக்க