Latest News
Home / இலங்கை (page 40)

இலங்கை

காரைதீவு பிரதேச சபை வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் தீர்மானம்!

இலங்கை அரசின் அங்கீகாரத்தோடு இவ்வருடம் நாவலர் ஆண்டு எனப் பிரகடனம் செய்யப்பட்டதோடு நாவலர் பெருமான் பிறந்த 200 வது ஜனன ஆண்டிலே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது பல்வேறுபட்ட நாவலர் பெருமானின் அற்பணிப்பான செயற்பாடுகளை நீளநினையும் வகையில் பல்வேறு”செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளது. எதிர்வரும் 14.12.2022 தொடக்கம் 18.12.2022 வரை நாவலர் மாநாடு வடக்கிலே முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் சுவாமி விபுலாநந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் …

மேலும் வாசிக்க

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது. மேலும் அம்பாரை மாவட்டத்தில் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் வேளையில் ஆறுமுக நாவலர் அறப்பணி திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக தம்பிலுவில் 06 கிராம சேவக பிரிவுகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் …

மேலும் வாசிக்க

சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் தி/சல்லி அம்பாள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 41 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது (03/12/2022) காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சிவஞானமுர்த்தி முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலான கடற் தொழிலே பிரதான தொழிலாக காணப்படுகின்றது. இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது கல்வியில் அக்கறை காட்டியும் பாடசாலையை விட்டு விலகாமல் அவர்களை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 5g 750mg கெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபரை நேற்று (03) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட போதை ஒழிப்பு பிரிவின் பொலிசார் கைதுசெய்துள்ளனர். போதைப்பொருள் பயன்பாடு இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கொண்ட 15 பேர் கொண்ட குழுவின் சுற்றிவளைப்பில் அக்கரைப்பற்று 05ம் …

மேலும் வாசிக்க

சுற்றுலா பயணிகளுக்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் அரசாங்கம் !

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். ஜனவரி மாதம் மொபைல் செயலியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்!

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்கியவர் தாம் என்றும் டயானா கமகே தெரிவித்தார். “அந்த கண்ணாடி வீட்டை அழிக்க நான் கல்லை அடிக்க விரும்புகிறேன்,” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு …

மேலும் வாசிக்க

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களில், 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் …

மேலும் வாசிக்க

சீனா கோ ஹோம் பிரசாரமும் தொடங்கப்படும் – சாணக்கியன் எச்சரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்  எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் …

மேலும் வாசிக்க

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா – ஜனாதிபதி கேள்வி

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அவர்களுக்கு பகுதியளவு நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டு …

மேலும் வாசிக்க

கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு புதிய ஏற்பாடு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் விண்ணப்பதாரர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும் ,இதற்காக 50 அலுவலகங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் …

மேலும் வாசிக்க