Latest News
Home / இலங்கை (page 22)

இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற …

மேலும் வாசிக்க

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை புதிய பயங்கரவாத …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்பு பட்டியலில் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி !!

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, 5 வருடங்களுக்கு …

மேலும் வாசிக்க

திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இன்றைய தினம் (05/05/2023) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. D.V. சுதாசேகர் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் (60) மாணவர்களுக்கும், பொத்துவில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் …

மேலும் வாசிக்க

மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்தின் 3ஆவது இந்திரவிழா இன்று….

மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்திரின் 3ஆவது விழாவும் இந்திரவிழாவும் இன்றைய தினம் (2023/05/06) திருக்கோவில் 04 பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் அறிவர்கள் தலைமையகத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றுது. இன் நிகழ்வானது திரு.கு.குமாரதாசன் தாபகர் பிரதான ஆசான் தமிழ் அறிவர்கள் சங்கம் அவர்களின் தலைமையிலும் சிவஸ்ரீ இரா.ஜெகதீஸ்வர சர்மா அவர்களின் முன்னிலையிலும் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மங்கள விளகேற்றல் தேவாரம் இசைத்தல் இந்து சமய கொடி ஏற்றுதல் …

மேலும் வாசிக்க

புதிய கல்விக் கொள்கை : ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழு !!

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்!

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள …

மேலும் வாசிக்க

அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு….

ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்கதாக தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயம் திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் …

மேலும் வாசிக்க