Latest News
Home / இலங்கை (page 50)

இலங்கை

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள ஆரம்பிக்கப்படுகின்றன

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையிலேயே தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக, …

மேலும் வாசிக்க

காலி மாவட்ட ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு…..

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் காலி மாநகர சபை மற்றும் முன்னாள் பிரதம வேட்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர …

மேலும் வாசிக்க

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….

தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், தோட்ட நல அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்துகொண்டு வழங்கி …

மேலும் வாசிக்க

கோட்டாவின் பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான பணத்தினை செலுத்திய இலங்கை அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார். இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் …

மேலும் வாசிக்க

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. அந்தவகையில் 2009ஆம் ஆண்டு இறுதியாக திருத்தம் செய்யப்பட்டு 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான திருத்தங்கள் இடம்பெறவுள்ளதோடு இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சாரதி அனுமதிப்பத்திர திணைக்கள ஆணையாளர் வசந்த என். ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இப்பொழுது புதிய …

மேலும் வாசிக்க

எரிபொருள் விலைசூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை

இம்மாதம் விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கூடினால் இங்கு எரிபொருள் விலை கூடும் , விலை குறைந்தால் இங்கு குறைக்கப்படும் அதுவே எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படை என விளக்கமளித்திருந்த அமைச்சர் தற்போது …

மேலும் வாசிக்க

அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….

தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 112 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இதற்காக அமெரிக்க …

மேலும் வாசிக்க

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – நாடளாவிய ரீதியில் சோதனை

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொள்ளபடவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கதிர்காம பாத யாத்திரிகளுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள்….

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது. கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத யாத்திரை இந்த வருடம் கதிர்காம பாத யாத்திரைக்கு பல யாத்திரிகள் சென்றும், செல்லவும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள் அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளது. கதிர்காம பாத யாத்திரிகளுக்கான அறிவிப்பு 01. கதிர்காம …

மேலும் வாசிக்க

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.

காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம் குருக்கள், உதவிக்குருக்கள் சிவஶ்ரீ கோபிநாதசர்மா ஆலய வண்ணக்கர் திரு. திசாநாயக்க சுதுநிலமே மொனராகலை மேலதிக அரசாங்கஅதிபர், லாகுகல பிரதேச செயலாளர் திரு ந.நவநீதராஜா, கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு எஸ். நவநீதராஜா,முப்படை அதிகாரிகள், வனபாதுகாப்பு உயர் அதிகாரிகள், காரைதீவு தவிசாளர்”திரு.கி.ஜெயசிறில்,மாவட்ட …

மேலும் வாசிக்க