Latest News
Home / இலங்கை (page 30)

இலங்கை

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க …

மேலும் வாசிக்க

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் …

மேலும் வாசிக்க

பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் !!

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை …

மேலும் வாசிக்க

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை …

மேலும் வாசிக்க

சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!

2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இணைய முறைமையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சகல விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

செப்டம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம்!

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக லங்கா நிலக்கரி கம்பனி தெரிவித்துள்ளது. குறித்த 13 இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை வந்த 13வது கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் 12வது கப்பலில் இருந்து கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 36 நிலக்கரி …

மேலும் வாசிக்க

பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் – ஜனாதிபதி!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். …

மேலும் வாசிக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன – நிதி அமைச்சின் செயலாளர்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போதே அவர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் …

மேலும் வாசிக்க

பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம் என அதன் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும், மின்சாரக் கட்டண உயர்வால், குளிர்சாதனப் பெட்டிகளில் தங்களுடைய பொருட்களை வைப்பதற்கு பெரும் செலவினங்களைச் செய்ய வேண்டிய நிலை …

மேலும் வாசிக்க

கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. அத்துடன், நியூசிலாந்து, அலாஸ்கா, கொலம்பியா, டோங்கா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளில் 5 ரிக்டருக்கு மேல் வலிமை கொண்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பயங்கர சோகத்தை எதிர்கொண்ட துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இந்த …

மேலும் வாசிக்க