Latest News
Home / Vipurthan (page 2)

Vipurthan

அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நான்காம் நாள் இன்று…..

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று(25) நான்காம் நாளுக்கான பூசை நடைபெற்றது. இதன் போது அப் பிரதேச மாணவர்களினால் நற்சிந்தனை மற்றும் கூட்டுப்பிராத்தனை நிகழ்வும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை எம்பெருமானின் வீதி உலாவினை தொடர்ந்து சனிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பேணியவாறு …

மேலும் வாசிக்க

 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.

த.அபிராஜ், வை.ஜினுஜன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) நேற்றய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று இரண்டாம் நாளுக்கான பூசை நடைபெற்றது. மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை எம்பெருமானின் வீதி உலாவினை தொடர்ந்து சனிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பேணியவாறு எம் பெருமானை தரிசித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

மேலும் வாசிக்க

ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட  1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர். அம்பாரை மாவட்ட ஆலம் விழுகள் அமைப்பின் இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான சு.ஸ்ரீதரன் தலைமையில் கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு செயலட்டைகளை அதிபர்களிடம் வழங்கி வைத்தார். ஆலம் விழுதுகள் அமைப்பானது அம்பாரை மாவட்டம் முழுவதிலும் பசுமைப்புரட்சி திட்டம் …

மேலும் வாசிக்க

கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடான ரஷ்யாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 171பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,142ஆக உள்ளது. அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 485,253ஆக உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 236,714பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை …

மேலும் வாசிக்க

கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார். இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் …

மேலும் வாசிக்க

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் …

மேலும் வாசிக்க

பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் …

மேலும் வாசிக்க

இவ் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது; கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும

ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கமைய, முதற்கட்டமாக ஜூலை 6 ஆம் திகதி 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. இதேவேளை, உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் …

மேலும் வாசிக்க

கிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு – இந்தோனேஷியாவில் சம்பவம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில், கிணறொன்றில் வீழ்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய ​ஜாகோப் ரொபேட்ஸ் (Jacob Roberts) என்பவர் நாயினால் துரத்திச் செல்லப்பட்ட போது, 4 மீற்றர் ஆழமான கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது அவருடைய கால் ஒன்று முறிந்துள்ளது. அவர் வீழ்ந்த கிணறு சிறிதளவு நீருடன், உலர்ந்த நிலையில் காணப்பட்டாலும் கால் உடைந்த காரணத்தினால் அவரால் வௌியேற முடியாமற்போனதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. …

மேலும் வாசிக்க

தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் தேர்தலுக்கான திகதி இந்த வாரம் அறிவிப்பு; மஹிந்த தேசப்பிரிய

  பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி கலந்துரையாடிருந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தலை திகதியை அறிவிக்கமுன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் …

மேலும் வாசிக்க