Latest News
Home / Vipurthan (page 4)

Vipurthan

மின்கம்பிகள் அறுந்து லொறி மீது வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு.

மாத்தளை – மஹஉல்பத்த பகுதியில் அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் லொறியொன்றின் மீது அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலா மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததையடுத்து மின்கம்பி அறுந்து லொறி மீது வீழ்ந்துள்ளது. இதன்போது லொறியில் மூவர் இருந்துள்ளதுடன், இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மற்றையவர் லொறியில் இருந்து குதித்து …

மேலும் வாசிக்க

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு

 பலாங்கொடை – சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.30 அளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த இம்புல்பே பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தார். பலாங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி

வி.சுகிர்தகுமார்  கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி நேற்றிரவு(05) இடம்பெற்றது. பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்று வந்தன. அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 ஆம் திகதி …

மேலும் வாசிக்க

கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில் 8,726பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 144பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,528ஆக உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 231,626 …

மேலும் வாசிக்க

இலங்கைக்கு கடத்த இருந்த 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றினர்.

தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இராமநாதபுரத்தின் திருவாடானை பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளே இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பொலிஸார் இன்று நண்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மான் கொம்பும் சிங்கப் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை …

மேலும் வாசிக்க

சுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி: பல்வேறு தரப்பினரும் கண்டனம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ​PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க தூதரக அதிகாரி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (04) அதிகாலை 1.30 அளவில் கட்டாரில் இருந்து வந்த விமானத்தில் வருகை தந்த அமெரிக்க தூதரக அதிகாரி PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார். இராஜதந்திர தொடர்புகள் சம்பந்தமான வியன்னா பிரகடனம் மற்றும் தரமான செயற்பாடுகளின் பிரகாரமே, தமது …

மேலும் வாசிக்க

மொனராகலையில் துப்பாக்கிச்சூட்டு, ஒருவர் உயிரிழப்பு: மக்களிடையே பதற்றம்.

மொனராகலை – இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தேகட்டுவ பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது, பலத்த காயமடைந்த சந்தேகநபரை மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி …

மேலும் வாசிக்க

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

வி.சுகிர்தகுமார் அம்பாறை – ஆலையடிவேம்பு ,கண்ணகிபுரம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியுடன் இளைஞன் ஒருவன் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.றஸீட் உத்தரவிட்டார். நேற்று முன்தினம்  வியாழக்கிழமை (04.06.2020) மாலை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

இலங்கையர்கள் இன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

பூரண சந்திரகிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இன்றிரவு 11.15 தொடக்கம் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளது. நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளது. சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமனம்

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்றை சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழு அன்மையில் வழங்கி வைத்துள்ளது. அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தனது ஆரம்பகல்வியை அக்கரைப்பற்று அல்ஹிதாயா வித்தியாலயத்தில் பயின்றார். பின்னர் கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வியை தொடர்ந்த அவர் உயர்தரக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் …

மேலும் வாசிக்க