Latest News
Home / Kirishanth admin (page 32)

Kirishanth admin

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்படி இதன் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பொதுக்கூட்டம் நாளை….

ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை (14.07.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற ஆலய பரிபாலன சபையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் பொன்னான கருத்துக்களையும், ஒத்தாசைகளையும் வழங்குமாறும் ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலய பரிபாலன சபையினர் அறியத் தருகிறார்கள்.

மேலும் வாசிக்க

மீண்டும் திரிபோஷ

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 இலட்சம் திரிபோஷ பக்கட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் தேவைப்படும் திரிபோஷவை உற்பத்தி செய்வதற்காக 15 மெட்ரிக் தொன் கிலோகிராம் அளவிலான சோளம் அவசியமாக உள்ளதாகவும் அவர் …

மேலும் வாசிக்க

வனிந்து ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் தனது திறமைகளை சிறப்பாக வௌிக்காட்டியிருந்தார். அவர் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் சிம்பாப்வேயின் ஷான் வில்லியம்ஸை வீழ்த்தி விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை …

மேலும் வாசிக்க

கிண்ணியா விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் (56) பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் அதிபர் திரு.செ.சத்தியசீலன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஷ்ட, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையின் (56) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது. …

மேலும் வாசிக்க

500 வது நாளில் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் …

மேலும் வாசிக்க

பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!

இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை மக்களிற்கே …

மேலும் வாசிக்க

பொலன்னறுவை பேருந்து விபத்துக் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விபத்துத் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

-ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில் இருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நோக்கி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததனர். தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளதுடன் நெல்லின் உத்தரவாத நிலையை நெல் அறுவடை செய்தவுடன் ஒரு கிலோவுக்கு 100 ரூபாவாகவும் காய்ந்த ஈரப்பதன் அற்ற நெல்லை கிலோவிற்கு 120 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து …

மேலும் வாசிக்க