Latest News
Home / Kirishanth admin (page 18)

Kirishanth admin

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் நவராத்திரி பூஜை நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக…

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் நவராத்திரி பூஜை நிகழ்வு இன்றைய தினம் (22/10/2023) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்களின் தலைமையில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தில் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது 49.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி இலங்கை அணிக்கு வெற்றி 263 ஒட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை …

மேலும் வாசிக்க

ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 31 லட்சம் ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த …

மேலும் வாசிக்க

நாளைய தினம் பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய கடமை ஆகும். எனவே, நாளைய தினம் நடைபெறவுள்ள பாடசாலைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு, கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். …

மேலும் வாசிக்க

பாடசாலைகளுக்கான மைதானங்களுக்கான காணி அனுமதி பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு!

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4 பாடசாலைகளுக்கு மைதானங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வானது திருக்கோவில் வலையக்கல்வி பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம அவர்களும் விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் வலய உடல் கல்வி …

மேலும் வாசிக்க

அகில இலங்கை சமாதான நீதவானாக செல்வராஜா நிரோஷன் சத்தியப்பிரமாணம்…..

காரைதீவை சேர்ந்த செல்வராஜா நிரோஷன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பாரை மாவட்ட நீதவான் நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக இன்று (18) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் வாசிக்க

தங்கத்தின் விலைக்கு நேர்ந்த கதி!

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் தாக்கத்தால் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கடந்த வாரம் வெளிநாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்ளூர் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இந்த வாரம் 1,820 டொலரில் இருந்து 1,925 டொலராக அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக …

மேலும் வாசிக்க

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் டின் மீன்களின் விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும். உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.545 ஆக …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஹரிஷ்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ஹரிஷ் இன்று (18.10.2023) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் ஹரிஷ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் செல்வன் ஹரிஷ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கிவைப்பு….

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் இன்றைய தினம் (17/10/2023) தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் K.கவிதா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வு தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு முதற்கட்டமாக பதினைந்து இலட்சம் …

மேலும் வாசிக்க