Latest News
Home / தொழில்நுட்பம் / Facebook பாவனையாளர்கள் தமது News Feed மீது அதிக கட்டுப்பாடுகளை பெற உள்ளனர்

Facebook பாவனையாளர்கள் தமது News Feed மீது அதிக கட்டுப்பாடுகளை பெற உள்ளனர்

தமது பொதுவான போஸ்ட்களில் யார் கமென்ட் செய்ய முடியும் என்பதை கட்டுப்படுத்தக்கூடியவகையில், தமது News Feed இல் பகிரும் அனைத்து தகவல்களின் மீதும் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் விதத்தில் புதியதோர் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது இலங்கையின் பிரபலமானோர், உருவாக்கிகள் மற்றும் வியாபாரங்கள் தமது போஸ்ட்களில் கமென்ட் செய்யும் பிரிவினரைக் கட்டுப்படுத்தி பிரயோசனமான உரையாடல்களை தமது சமூகங்களிடையே ஊக்குவிக்க முடியும்.

News Feed இன் முக்கிய குறிக்கோளானது தமக்கு முக்கியமானவர்களை, சுவாரசியமான தகவல்களை, மற்றும் தம்மைச் சுற்றியுள்ள உலகை தம்முடன் இணைப்பதுவே ஆகும். குயஉநடிழழம தமது பாவனையாளர்களுக்கு தகுந்த சுழலையும் சிறந்த கட்டுப்பாடுகளையும் வழங்குவதற்காக அதிகமாக முதலீடு செய்கின்றது. பாவனையாளர்களுக்கு தமது போஸ்ட்களை தாம் நிர்ணயிக்கும் நபர்கள் மாத்திரம் காணக்கூடியவகையில் தமக்கு பிடித்த பக்கங்களில் இருந்து மாத்திரம் தகவல்களைப் பெறக்கூடியவகையில் தெரிவுகளை வழங்குகின்றது. பாவனையாளர்கள் தமது News Feed preferences மற்றும் privacy settings இல் தமக்கு மிகவும் உகந்த தெரிவுகளை செய்ய முடியும்.

● Favorites: தமக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் மற்றும் பக்கங்களின் தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கும் படி கட்டுப்படுத்த முடியும்.

● Most Recent: மிகவும் புதிய போஸ்ட்கள் வழிமுறைகளைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டு உங்களுக்கு காட்டும்.

● Feed Filter Bar: News Feed இன் மேலே புதியதோர் அம்சம், புதிய, நிலையான மற்றும் மிகவும் பிடித்த தகவல்களிடையே இலகுவாக மாறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

● “Why Am I Seeing This?” அம்சத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளோம்: தற்பொழுது பாவனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட போஸ்ட்களையும் தமக்கு ஏன் இப் போஸ்ட் தென்படுகின்றது என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.

இவ் அறிவிப்புக்கு மேலதிகமாக விபரங்களை அறிந்து கொள்ள Facebook இன் newsroom post ஐ பார்க்கவும், இவ் அறிவித்தலுக்கு மேலதிகமாக Facebook இன் சர்வதேச விவகாரங்களின் உப தலைவர் நிக் கிளெக் கட்டுரையொன்றையும் வெளியிட்டுள்ளார், இக்கட்டுரையில் தகவல்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுத்தப்படுகின்றது என்றும் பொதுவாக இவ் வரிசைப்படுத்தல் வழிமுறை பற்றியுள்ள தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் பற்றி விரிவாக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *