Latest News
Home / ஆலையடிவேம்பு (page 72)

ஆலையடிவேம்பு

பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையில்

வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள நாடு என்னும் ரீதியில் இலங்கை நாடும் உலகநாடுகள் மத்தியில் பேசப்படுவதுடன் பாராட்டினையும் பெற்று  வருகின்றது. இதற்கமைவாக தற்போது கிராமங்களிலும் கொரோனா தொடர்பான பிசிஆர் பரிசோதனை நடவடிக்கையினை சுகாதார திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் AMIF இனால் நடாத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசாலைகள் மீள தொடங்குவது தொடர்பாக கலந்துரையாடல்.

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேஷனால் (AMIF) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் 1, அகத்திகுளம், நாவற்காடு மற்றும் பனங்காடு கிராமங்களில் நடைமுறைப்படுத்தும் முன்பள்ளிகள் கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இலங்கையில் கொரோனா தொற்றினால் மூடப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளை ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்படலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கமைவாக முன்பள்ளிகளை மீள தொடங்குவது தொடர்பாக அம்மன் மகளிர் இல்ல பாவுண்டேஷன் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்….

ஜினுஜன், ஜதுசன் அக்கரைப்பற்று அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (13.08.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணியவில் ஆலயத்தின் பிரதம குரு அவர்களின் தலைமையில் கிரிகைகள் இடம் பெற்றதை தொடர்ந்து கொடிற்றம் நிகழ்ந்தது அதனை தொடர்ந்து பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை விழா

வி.சுகிர்தகுமார் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் சிறுபோக நிலக்கடலை அறுவடை விழா அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டலின் கீழ் இன்று நடைபெற்றது. அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி வே.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அகமட் சனீர் மற்றும் விசேட அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபை …

மேலும் வாசிக்க

ஆறு மாத காலத்தின் பின்னர் சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் – ஆலையடிவேம்பு பிரதேச மாணவர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகம்…

வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தலின் பிற்பாடு நாடளாவிய ரீதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட பாடசாலைகள் உள்ளிட்ட சகல பாடசாலைகளும் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று திறக்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கமைவாக இன்று 200 மாணவர்களுக்குட்பட்ட கனிஷ்ட வித்தியாலயங்களில் சகல வகுப்பு  மாணவர்களும் வருகை தந்ததுடன் கற்றல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திலும் இன்று கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன் சுகாதார …

மேலும் வாசிக்க

பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி -அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள்….

வி.சுகிர்தகுமார்   நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பதவியேற்பை கொண்டாடும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகளை எற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்திற்கு முன்பாகவும் நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட தலைமை வேட்பாளரும்; தேர்தலின்போது பொதுஜன …

மேலும் வாசிக்க

பாடசாலைகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளில் சிரமதானங்கள்….

ஜினுஜன்,கிஷோர் இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் முழுமையாக ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் அனைத்திலும் பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு திருநாவுக்கரசு வித்தியாலயம், அன்னை சாராத வித்தியாலயம், ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை என அனைத்து பாடசாலைகளும் பாடசாலைகளிலும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நாளை சிரமதானம் – பாடசாலையின் அதிபர் அழைப்பு….

ம.கிரிசாந் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு நாளை (09) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெறவுள்ளது. கொரோனா அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து வருகின்ற (10) திங்கள்கிழமை அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மீள ஆரம்பமாக இருக்கின்றது. அந்த நிலையில் இந்த சிரமதான நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் பங்குகொண்டு உதவுமாறு பாடசாலையின் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்!!!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் கச்சான் பயிரையும் சேதமாக்கியது. இதன் பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கட்டடத்தின் கதவுகளை உடைத்த யானை அருகில் இருந்த கவடாப்பிட்டி கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த கடையொன்றினையும் தாக்கி சேதப்படுத்தியது. இச்சம்பவம் நேற்றிரவு(01) நடைபெற்றுள்ள நிலையில் யானைகள் அங்கிருந்து அகன்று அருகில் …

மேலும் வாசிக்க

செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா

வி.சுகிர்தகுமார்   செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அம்பாரை மாவட்டத்திற்கான விஜயமொன்றை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்; அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் துரையப்பா நவரெட்ணராஜாவின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட அவர் ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க