Latest News
Home / ஆலையடிவேம்பு / சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை விழா

சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை விழா

வி.சுகிர்தகுமார்

சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் சிறுபோக நிலக்கடலை அறுவடை விழா அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டலின் கீழ் இன்று நடைபெற்றது.

அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி வே.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழா நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அகமட் சனீர் மற்றும் விசேட அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் கலந்து கொண்டதுடன் விவசாய திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார், ஆலிம்நகர் விவசாய விரிவாக்கல் பிரிவின் பொறுப்பதிகாரி பிர்னாஸ் ஹரிஸ்,  பாரி நிப்ராஸ் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மகாவலி கமத்தொழில் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு மற்றும் விவசாய திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்படும் 16 பயிர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விரைவாக ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதைகளையும் நிதியுதவியினையும் இலவசமாக வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டல் மற்றும் தொழினுட்ப உதவிகள், ஆலோசனை, பங்களிப்பு ஆகியவற்றுடன் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வினை அதிதிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு நிலக்கடலை பயிர்ச்செய்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டினர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *