Latest News
Home / உலகம் (page 20)

உலகம்

கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது. அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு …

மேலும் வாசிக்க

பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீடித்து ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் நுழைவு இசைவு (விசா) தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்கு ஹெச்-1பி, ஹெச்-2பி போன்ற நுழைவு இசைவுகள் வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது. இந்தநிலையில், நுழைவு இசைவு (விசா) தொடர்பான …

மேலும் வாசிக்க

சுகாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எளிமையான முறையில் புத்தாண்டை வரவேற்ற உலக மக்கள்!

கடந்த ஒருவருட காலமாக நீடிக்கும் சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உலகம் முழுவதும் 2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டு உலகம் பலத்த சுகாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஓர் ஆண்டாகும். உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததுடன் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டை உலகளாவிய மக்கள் வரவேற்றுள்ளனர். தொடர்ந்தும் சுகாதார கட்டுப்பாடுகள், எல்லை முடக்கங்கள் பல நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள …

மேலும் வாசிக்க

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2021

நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவைத் தொடர்ந்து, உலகில் புத்தாண்டை வரவேற்கும் இரண்டாவது நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளுடன் காத்திருந்த நியூசிலாந்து மக்கள், புத்தாண்டு பிறந்தவுடன், அதை ஒளிவெள்ளத்தால் வரவேற்றுள்ளனர்.

மேலும் வாசிக்க

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!

அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த உற்சாகமான சார்பு தேர்வு பிரச்சாரகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். பெண்கள் மகிழ்ச்சியுடன் கத்தினார்கள், தங்கள் நண்பர்களை இறுக்கமாக அணைத்துக்கொண்டு, பரவசத்தில் குதித்தார்கள். பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில், பெண்கள் …

மேலும் வாசிக்க

கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் அவிசாவெலப் பகுதியில் 29 பேர், அளுத்கடை பகுதியில் 28 பேர் மற்றும் மட்டக்குளி பகுதியில் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அத்தோடு, கொள்ளுப்பிட்டி பகுதியில் 22 பேர், பொரளை பகுதியில் 20 பேர் மற்றும் கொம்பனி வீதியில் 15 பேர் தொற்றாளர்களாக …

மேலும் வாசிக்க

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் ஈரான்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை தங்களிடம் காணப்படுவதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கத் தடைகள் காரணமாக போதுமான அளவு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், …

மேலும் வாசிக்க

சீனத் தயாரிப்பு தடுப்பூசியைப் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

சீனத் தயாரித்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எச்சரித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டேவின் நெருங்கிய தொடர்பில் இருந்த பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக குழுவின் தலைவர் திங்களன்று கூறினார். ஆனால் ஜனாதிபதி இன்னும் சரியான அல்லது பொருத்தமான தடுப்பூசிக்காக காத்திருப்பதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இந்தநிலையில், பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாக …

மேலும் வாசிக்க

புதிய ரக கொரோனா வைரஸ் அச்சம்: அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் தடைசெய்தது ஜப்பான்!

முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பானில் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளிலிருந்தும் வெளிநாட்டினர் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. திங்கட்கிழமை தொடங்கி வரும் 31ஆம் …

மேலும் வாசிக்க