Latest News
Home / உலகம் (page 21)

உலகம்

பிரேஸில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

பிரேஸில் துணை ஜனாதிபதி ஹாமில்டன் மவுரோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 67 வயதான ஹாமில்டன் மவுரோவுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா உறுதியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் ஜபுரோவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே தனிமைபடுத்தி கொண்டிருப்பதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேஸில் ஜனாதிபதி போல்சலனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி …

மேலும் வாசிக்க

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது – துருக்கி

கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91 சதவீதம் பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91 சதவீதம் பயனளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என துருக்கி குறிப்பிட்டுள்ளது. சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன. பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றமடைந்த …

மேலும் வாசிக்க

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை 30இலட்சத்து 21ஆயிரத்து 964பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 54ஆயிரத்து 226பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 29ஆயிரத்து 258பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 567பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் …

மேலும் வாசிக்க

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 51 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடி 70 இலட்சத்து 09 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 07 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கமைய கொரோனா தொற்றினால் 17 இலட்சத்து 64 ஆயிரத்து 349 …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் போயிங்-737 விமானங்களின் சேவை ஆரம்பமாகிறது

அமெரிக்காவில் கடந்த 21 மாதங்களுக்குப் பின்னர், அடுத்த வாரம் முதல் போயிங்-737 மக்ஸ் ரக விமானங்கள் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. 2018, 2019ஆம் ஆண்டுகளில் இட்மபெற்ற பெரும் விபத்துகளைத் தொடர்ந்து, போயிங் மக்ஸ் ரக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டு அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டு மேம்படுத்தப்பட்டன. வர்த்தக ரீதியில் போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு கடந்த நவம்பரில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தின் முதல் பயணம், கடந்த ஒன்பதாம் …

மேலும் வாசிக்க

துனிசியாவில் ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு!

துனிசியாவில் நாடு தழுவிய அவசரகால நிலை இன்று 26ஆம் திகதி முதல் 2021 ஜூன் 23 வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதக் குழுவால் ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் பேருந்து மீது கடந்த 2015ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஜனாதிபதியின் 12 காவல் படை வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2015 நவம்பர் 24ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த அவசரகால நிலையானது, …

மேலும் வாசிக்க

20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா!

ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. 20 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத …

மேலும் வாசிக்க

உருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்!!

தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது. பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றம் பெற்ற இந்த புதிய கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது. எனவே மக்கள் …

மேலும் வாசிக்க

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!

கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சிரியா, யேமன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் போரினால் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் அவலங்கள் குறித்து புனித பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், …

மேலும் வாசிக்க

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய 26 பேருக்கு கொரோனா!

பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வருகை தந்துள்ள 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 14 பேருக்கும், அமிர்தசரசில் 9 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும்,  சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் …

மேலும் வாசிக்க