Latest News
Home / இலங்கை (page 6)

இலங்கை

எரிபொருள் நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்களுக்கும் இதே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு?

எதிர்வரும் நீண்ட விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு  பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் தாம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பிரைட் ரைஸ், கொத்து பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

“விரைவில் பிரைட் ரைஸ், கொத்து,சோறு  உள்ளிட்ட உணவுகளின் விலை  50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக” அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். நாட்டில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தினாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

திருமூலர் சிலை அம்பாறை மாவட்டம் முழுவதும் சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக :இன்று அக்கரைப்பற்றில் இருந்து ஆரம்பம்…..

அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருமூலர் திருவிழா எனும் தலைப்பின் கீழ் திருமூலர் சிலை சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக அம்பாறை மாவட்ட தமிழ் கிராம ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (22) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்த சிறுவர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊர்வலமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள், தம்பிலுவில் பிரதேச பாடசாலைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச பாடசாலைகளை சென்று …

மேலும் வாசிக்க

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் …

மேலும் வாசிக்க

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 /- சம்பளம்! ஜனாதிபதி பணிப்புரை!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை …

மேலும் வாசிக்க

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் …

மேலும் வாசிக்க

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகளை குறைக்க புதிய தீர்மானம்

எலுமிச்சை விலையை கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக லெமனை பயன்படுத்த முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய நுகர்வோர் சபை இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கிராமப்புற சூழலில் அதிகளவில் விளையும் எலுமிச்சையை அறிமுகப்படுத்தியவுடன் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான தேசிக்காயின் விலையை குறைக்க முடியும் என குறிப்பிடுகின்றனர். மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் …

மேலும் வாசிக்க

திருவாசக மாநாடு 2023.12.15 முதல் 2023.12.17 வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில்…..

அம்பாரை மாவட்டம் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில் 2023.12.15 வெள்ளி முதல் 2023.12.17 ஞாயிறு வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கலாபூசனம் திரு. தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு இடம் பெறவுள்ளது. சமய சமூக ஆன்மிக இறை ஆசி கிடைக்க வேண்டும் என்னும் நோக்குடன் இந்தியாவில் இருந்து சூரியநார் கோவில் ஆதின தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகளின் வருகையை ஒட்டி …

மேலும் வாசிக்க

“இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023 காரைதீவில்…….

“இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று (02) காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்(பொது முகாமையாளர் ராமகிருஷ்ணன் மட்டக்களப்பு ),பிரதம அதிதி திரு.சிந்தக்க அபேவிக்ரம (அம்பாறை அரசாங்க அதிபர்), கௌரவ அதிதிகள் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி. …

மேலும் வாசிக்க