Latest News
Home / இலங்கை (page 8)

இலங்கை

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர். தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் …

மேலும் வாசிக்க

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்களால் வரவு செலவுத் திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும் என்றும் அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது …

மேலும் வாசிக்க

மின் கட்டண பட்டியல் குறித்த முடிவு

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில், 1987 என்ற எண்ணுக்கு குறுந்தகவலை (SMS) அனுப்புவதன் மூலமும் இந்த ebil சேவையில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL <இடைவௌி> …

மேலும் வாசிக்க

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

வரவு – செலவு திட்டம் தொடர்பான கருத்துக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் கருத்து, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முன்மொழிவுகளை நாம் வரவேற்கின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள …

மேலும் வாசிக்க

சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாட தயார்

கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலக் குழுவிற்கு …

மேலும் வாசிக்க

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு – காஞ்சன

இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தற்செயலாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிக்க முடிவு செய்தால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். …

மேலும் வாசிக்க

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 31.12.2015 க்கு முன்னர் மற்றும் 01.01.2016 முதல் 01.01.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்திற்காக வருடாந்தம் 67,608 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். “மாநில …

மேலும் வாசிக்க

10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு!

இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில் இஸ்ரேலின் உட்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேலிய நிறுவனங்கள் விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இப்புதிய ஒப்பந்தம் …

மேலும் வாசிக்க

2023, மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் இவ் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள முடியும்….

“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்வானது 2023.11.13 ஆம் திகதியில் இருந்து 2023.11.18 ஆம் திகதிவரையில் நடக்கவிருக்கின்றது. தாங்களும் முருகப்பெருமானின் புகழ் பாட விரும்பினால் தங்களின் காணொளிகளையும் எங்களுக்கு அனுப்பிவைக்கமுடியும். இடம்பெற இருக்கும் மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் …

மேலும் வாசிக்க