Latest News
Home / இலங்கை (page 446)

இலங்கை

தமிழர்களுக்கு தமிழில் மஹிந்த கூறிய முக்கிய தகவல்! நான் இதைத் தான் செய்வேன்…

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழம் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்துள்ளார். அத்துடன், நான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஐ.தே.கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த …

மேலும் வாசிக்க

தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா

தனது அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு முன்வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, சர்வதேசம் நாட்டின் சுயாதீனத்தில் தலையிடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் வேட்பாளர் அறவிப்பைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். …

மேலும் வாசிக்க

இலங்கை அரசியலில் அதிரடி : பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளர அரங்கில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சம்மேளனம் இடம்பெறவுள்ளது. இதில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ , கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பார். இந்த சம்மேளனம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  கட்சியின் உள்ளக விவகாரம் என்பதால் வெளித்தரப்புகளுக்கு …

மேலும் வாசிக்க

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலை காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, புத்தளம், குருணாகல், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காற்றின் …

மேலும் வாசிக்க

இலங்கை மக்களின் உயிரை பலியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள்! வருகிறது புதிய நடைமுறை

இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளின் சாரதிகளை 3 மாதங்களுக்கு பணி நீக்கம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லஆராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக …

மேலும் வாசிக்க

வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள்- பிரஜைகள் ஒன்றியம்

நீர்கொழும்பு உட்பட குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சசொரூபம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. திருச்சொரூபம் உடைப்பு தொடர்பாக தெரிவிக்கும்போதே பிரஜைகள் ஒன்றியத்தினர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நீர்கொழும்பு …

மேலும் வாசிக்க

ஜனாதிபதியின் கூற்றால் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 லட்சம் ரூபாவரை கொடுப்பனவாக பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் மத்தியில் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் எம்.பி.  விமலவீர திசாநாயக்க ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 லட்சம் ரூபா கொடுப்பனவைப்பெறுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் எமக்கு இரண்டரை லட்சத்துக்கும் 3 லட்சத்துக்கும் …

மேலும் வாசிக்க

நான் ஜனாதிபதி ; பிரதமர் ரணில்! – சஜித்

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். …

மேலும் வாசிக்க

கல்முனை நகரத்தை விற்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – ஹென்றி மகேந்திரன்

கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு …

மேலும் வாசிக்க

13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – சி.வி.விக்கி

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த தீர்ப்பு தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே இந்த …

மேலும் வாசிக்க