Latest News
Home / Kirishanth admin (page 532)

Kirishanth admin

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார் மிச்செல் பச்லெட்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று நிராகரித்தார். போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை இலங்கை நியமிக்கும் என நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில்  வியாழக்கிழமை  …

மேலும் வாசிக்க

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடர்: பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு நிறைந்த இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மாலிங்க தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், செஹான் ஜயசூரிய மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில், சகலதுறை வீரரான திசர பெரேராவும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம், லசித் மாலிங்க தலைமையிலான அணியில், அவிஷ்க பெனார்டோ, …

மேலும் வாசிக்க

போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது அமர்வில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர் இலங்கை மீதான போர்க் குற்றச் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார். மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மற்றொரு விசாரணை ஆணையத்தை நியமிக்க இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் …

மேலும் வாசிக்க

தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது

கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர் படகில் ஆங்கிலக் கால்வாயினூடாக சட்டவிரோதக் குடியேறியவர்களை ஏற்றிவந்த நிலையில் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்ட சார்ள்ஸ் லின்சுக்கு 44 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நொவெம்பர் 6 ஆம் திகதி இரண்டு …

மேலும் வாசிக்க

அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு!

இந்த அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். மைத்திரிபால சிறிசேனவை போன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக மாறியிருந்தாலும் கொள்கைகள் அப்படியே இருப்பதாகவும் பொருளாதாரத்தில் சிறப்பான மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் …

மேலும் வாசிக்க

2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!

போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது என்றும் …

மேலும் வாசிக்க

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கரிகரன் டிலக்ஷன் மகத்தான வெற்றி…

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது இதில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து இருவர் ( ஓர் இளைஞன் மற்றும் ஓர் யுவதி) போட்டியிட்டனர். இவ் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கரிகரன் டிலக்ஷன் 490 வாக்குகளை பெற்று மேலும் சக வேட்பாளரை விட 310 வாக்குகள் பெற்று இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (310) வெற்றிபெற்றவர் …

மேலும் வாசிக்க

பொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும் பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த தாமோதரம் பிரதீவன் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமாவார். கல்முனை தமிழ் இளைஞர் சேவை அமைப்பின் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத்தொடர் எதிர்வரும் 29ம் மற்றும் 01ம் திகதிகளில்….

அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத் தொடர் எதிர்வரும் 29ம், 01ம் திகதிகளில் மின்னொளியின் கீழ் நடாத்தப்படவுள்ளது. இணைந்து கொள்ளும் அணிக்கு நுழைவுக்கட்டணமாக 2000 ரூபா அறவிடப்பட்டுள்ளது . இது விலகல் முறையிலான தொடராகும். இச்சுற்று ஓவர் முறையில் இடம்பெறும். இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் பணப் பரிசும் காத்திருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு 075-7282225. 075-3857512    

மேலும் வாசிக்க