Latest News
Home / Kirishanth admin (page 540)

Kirishanth admin

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ICUவில் :- முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தற்போதைய அரசாங்கம் தான் எண்ணிய அளவுக்கு கூடாத அரசாங்கம் அல்ல, எனினும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் வருந்துகின்றனர் என முன்னாள் நிதியமைச்சரும் , மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளர் திறமையானவர். ஆனால் திறமையான அதிகாரிகள் சிலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். எமது அரசாங்கமும் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுத்தது. நாங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 208 …

மேலும் வாசிக்க

பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி!

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று(புதன்கிழமை) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சிகளைப் பெறும் காலப்பகுதியில் 22,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தி மக்களுக்காகச் செயற்பட வேண்டும்- ட்ரம்ப் ஆலோசனை

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைக் கைவிட்டு தனது நாட்டு மக்களின் நலனுக்காகச் செயற்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், “ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைக் கைவிட்டு தீவிரவாதத்தைப் பரப்புவதை நிறுத்தி தனது நாட்டு மக்களின் நலனுக்காகச் செயற்பட வேண்டும். பெருமைமிக்க ஈரானியர்கள் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக குரல் எழுப்பியதைக் கடந்த மாதங்களில் நாம் கண்டோம். ஏனென்றால் நமது சக்தி …

மேலும் வாசிக்க

ஆளும் தரப்பின் குரல் பதிவுகளும் இருப்பதால் தற்போது மூடி மறைக்கின்றனர் – சபையில் ஹிருனிகா

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள் ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும் அவற்றை எமக்கு கொடுக்க மறுக்கின்றனர் என ஹிருனிகா பிரேமசந்திர சபையில் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆளும் தரப்பின் குரல் பதிவுகள் இதில் இருப்பதாலேயே இப்போது குரல் பதிவுகளை மூடி மறைக்கப்  பார்க்கின்றனர் என்றும் ஹிருனிகா தெரிவித்தார். அவர்கள் தர மறுப்பதற்கான காரணத்தை கேட்டால் …

மேலும் வாசிக்க

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் ஒரு இடத்தில் பெயர் பலகை வைத்து இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த தனியான இடங்களை ஒதுக்க கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு யோசனையை கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும் அன்றைய எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பினை முன்வைத்தனர். நல்லாட்சி அரசாங்கம் மக்கள் போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக …

மேலும் வாசிக்க

இலங்கையில் விரைவில் 5G தொழில்நுட்பம் அறிமுகம்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சோதனை நடவடிக்கைகளை நடத்தி வருவதாக ஆணையம் கூறுகிறது. இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட வீதி திட்டம் ஒன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5G தொழில்நுட்பத்தை …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் உதவியை நாடும் சீனா

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த December மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது, சீனா முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்தது. வைரஸ் தாக்கியதாக உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,324 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய புதிய வைத்தியசாலையை 9 நாட்களில் சீனா கட்டி முடித்து …

மேலும் வாசிக்க

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் …

மேலும் வாசிக்க

கொரோனோ வைரஸை முதன்முதலில் கண்டு பிடித்த வைத்தியருக்கும் கொரோனோ வைரஸ் தாக்குதல்.. 

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர் லி வென்லியாங் ( Li Wenliang ) . 34 வயதுடைய இவர் கடந்த வருடம் December மாதம் 30ம் திகதி கடல் உணவுகள் விற்பனை செய்து வரும் 7 பேருக்கு புதிய வகை வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும், அதன் பெயர் கொரோனோ வைரஸ் என்றும்  வீ சட் ( WeChat) சமுக வலைத்தளம் மூலம் தகவல் கொடுத்துள்ளார். …

மேலும் வாசிக்க

பொதுத்தேர்தலில் பின் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் 8 பேர் நாட்டை ஆட்சி செய்யவுள்ளனர்- மரிக்கார்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும், ராஜபக்சவினர் தமது குடும்ப ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக 19வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் 18 வது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ராஜபக்ச சகோதரர்கள்  கோரி வருவதாக UNPயின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள குடியிருப்புத் …

மேலும் வாசிக்க