Latest News
Home / Kirishanth admin (page 500)

Kirishanth admin

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு. வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நேற்றும் 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்தநிலையில் இதுவரை மொத்தமாக …

மேலும் வாசிக்க

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. சில நாடுகள் தடுப்பு ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பின் நிவாரணப்பணி இன்றும்…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக  அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு  மேற்கொண்ட நிவாரணப்பணி அக்கரைப்பற்று 8/3 மற்றும் 8/2  பிரிவுகளில் இன்று இடம்பெற்றது. அன்புக்கரங்கள் அமைப்பின் நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப்பணியில் கிராம உத்தியோகத்தர்களான க.லோகநாதன் மற்றும் என்.மதுஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர். கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலம் முதல் இன்றுவரை பல்வேறு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – முறைப்பாட்டை நேரடியாக பிரதேச செயலகத்தில் எழுத்து மூலம் முன்வைக்கவும் முடியும்.

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட 7899 குடும்பங்களுக்கு பல்வேறு சமூக நலத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவாக 3கோடியே 94 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இது தொடர்பான விபரங்களை பிரதேச செயலகத்தில் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிட்டார். இதனடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் 4712 பேருக்கும்  காத்திருப்போர் பட்டியலில் உள்ள 1448 பேருக்கும் தொழில் பாதிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? நீதித்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு…

“பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மீளக்கூட்டுவதா? இல்லையா? என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். எனது விருப்பத்துக்கிணங்க நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு எதிராக முழு உலகமே ஓரணியில் நின்று போராடும்போது, இலங்கை மற்றொரு அரசமைப்பு நெருக்கடியை விரும்பவில்லை. எனவே, நான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை …

மேலும் வாசிக்க

ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்பு!

ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளதாக, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மெக்கல்லம், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”ஐபிஎல் தொடரை எப்படியும் ஒக்டோபர் மாதம் நடத்த …

மேலும் வாசிக்க

உலகம் முழுவதும் 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் அங்குமட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 2 இலட்சத்தை நெருங்குகின்றன. கடந்த 24 மணிநேரங்களில் 85 ஆயிரத்து 434 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு …

மேலும் வாசிக்க

பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது.” – இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலைகளின் வகுப்பறைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன. இதற்கமைவாக  மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஊடாக பெறப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பிரிவுகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் …

மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்? அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் …

மேலும் வாசிக்க