Latest News
Home / Kirishanth admin (page 520)

Kirishanth admin

நிவாரணங்களை பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி வழங்குவது தடை

வி.சுகிர்தகுமார் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டம் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று(25) பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், பொத்துவில் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.பார்த்தீபன், செங்காமம் இராணுவ முகாமின் அதிகாரி லெப்டினட் கேணல் வெதகெதர, சுகாதார வைத்திய அதிகாரி ஏ.யு.அப்துல் சமட், பொலிஸ் நிலைய …

மேலும் வாசிக்க

கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி

பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக இ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இ-தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை …

மேலும் வாசிக்க

இலட்சக் கணக்கானோருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!- வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை!

மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ். மதனழகன் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவும் மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்தாவிட்டால் இவ்வாறு பாரிய விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) …

மேலும் வாசிக்க

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் நம்ப முடியாத நிவாரணம்

அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களும், டொனால்ட் ட்ரம்ப் தரப்பு நிர்வாகிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கான தீர்வு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், கொரோனா வைரஸ் பாதிப்பினை ஈடு செய்ய பாரிய தொகை ஒன்றினை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகையின் அதிகாரி எரிக் யூலன்ட் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த ஒதுக்கீட்டுக்கான தொகை 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக …

மேலும் வாசிக்க

கண்காணிப்பு நிலைத்தத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்கள் சென்ற பேருந்து விபத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பின்னர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். கண்காணிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியவர்களை மாத்தறைக்கு இரணுவத்தினர் ஏற்றிச்சென்ற போது பின்னால் வந்த மற்றுமொரு பேருந்து மோதியுள்ளது. இதன்போது இராணுவத்தினர் இருவரும், மற்ற பேருந்தின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விபத்து …

மேலும் வாசிக்க

மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஸ்பெயினிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 743பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,249 புதிய நோயாளர்கள் அடையாளம் …

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிப்பு!

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் கந்தக்காடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளளார். நேற்றைய தினமும் இவ்வாறு அதிகளவானவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

நாடாளுமன்றத்தினை கூட்டும் தீர்மானத்திற்கு ஆதரவில்லை – சுமந்திரன்!

நாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் ரவூப் ஹக்கீமும் விரைவாகப் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம். தற்போதைய சூழ்நிலையில் பெருமளவானோர் …

மேலும் வாசிக்க

மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி-ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்

வி.சுகிர்தகுமார் மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்று பொலிசாரின் பாதுகாப்புடன் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் இன்று(25) காலை 10 மணிமுதல் 12 மணிவரைக்குமான காலப்பகுதியில் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தன்னுடன் கலந்துரையாடி கிராம உத்தியோகத்தர்களின் தெரிவுப்பட்டியலுக்கு அமைய உணவுப்பொதிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன் இன்று (25.03.2019) புதன்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் நண்பர்கள்

மேலும் வாசிக்க