Latest News
Home / Kirishanth admin (page 528)

Kirishanth admin

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். அத்துடன், வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் …

மேலும் வாசிக்க

இத்தாலியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: வீடுகளுக்குள்ளேயே இருக்க அரசாங்கம் உத்தரவு

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் கொரோனோவால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் புதிதாக நோய் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இத்தாலியில் நேற்று  மட்டும் 168 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனோ வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,149 பேராகும். கொரோனா …

மேலும் வாசிக்க

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற 5 பேர் கொண்ட அணியிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும், இறுதியாக சொந்த …

மேலும் வாசிக்க

நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில்   செவ்வாய்க்கிழமை  காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது பிரதேசத்தில்வரும் அபிவிருத்திகள் மேற்கொள்ளும் போது பிரதேச செயலகம் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாகவும், பொது விழாக்கள், மகளிர் தினம் போன்றவற்றில் பிரதேச பெண் உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டுவருவதாக கவலை வெளியிட்டனர். பிரதேச …

மேலும் வாசிக்க

உறவுகள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள், மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள், …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா

அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று (11.03.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மாணவர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

மேலும் வாசிக்க

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனால் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த தெரிவத்தாட்சி …

மேலும் வாசிக்க

இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளமையை சர்வதேச மன்னிப்பு …

மேலும் வாசிக்க

அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் இந்த இருபதுக்கு-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை வங்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி …

மேலும் வாசிக்க

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நிறைவு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன், தேசிய பரீட்சைக்காக விண்ணப்பங்கள் இணையத்தளத்தினூடாக பொறுப்பேற்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பம் என்பதால், இது வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். விண்ணப்பதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் இது தொடர்பாக காட்டிவரும் ஆர்வம் உயர்மட்டத்தில் காணப்படுகிறது. இணையத்தளத்தின் …

மேலும் வாசிக்க