Latest News
Home / ஆலையடிவேம்பு (page 79)

ஆலையடிவேம்பு

இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் -ஆலையடிவேம்பில் மாத்திரம் 6987 குடும்பங்களுக்கு 03 கோடியே 49 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்பட்டுவருவதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எச்.எம்.சப்றாஸ் தெரிவித்தார். இதனூடாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர் மற்றும் சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடு பட்டியலில் மூலம் தெரிவு செய்யப்பட்ட 173368 குடும்பங்களுக்கு 86 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் …

மேலும் வாசிக்க

ஆலம் விழுதுகள் அமைப்பு ஆலையடிவேம்பு பெண்கள் தலைமை தாங்கும் 100 குடும்பங்களுக்கு பயிர்கன்றுகள் மற்றும் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வி.சுகிர்தகுமார்   அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி வேலைத்திட்டத்திற்கு இணைவாக தனியார் தொண்டு அமைப்புக்களும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பானது கனடா உதவி அமைப்பின் நிதியுதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளையும் நாற்றுக்களையும் இன்று வழங்கி வைத்ததுடன் 70 குடும்பங்களுக்கான நிவாரணத்தையும் வழங்கி வைத்தது. அம்பாரை மாவட்டத்தில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது….

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி எம்.எச். முகமட் ஹம்சா இன்று (13)கட்டளை இட்டார். கைது செய்யப்பட்ட இரண்டாம் சந்தேக நபரை இம்மாதம் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் நேற்யை தினம் …

மேலும் வாசிக்க

சாத்தியமுடைய சில நிபந்தனைகளின் அடிப்படையில் சிகையலங்கார நிலையங்கள் திறக்கப்படும்- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் சிகையலங்கார நிலையங்களை மீளவும் திறப்பது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக பல நாட்களாக மூடப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்கள் காரணமாக அதில் தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த தற்போது கந்தளாய் பிரதேசத்திற்குட்பட்ட சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பணி புரிகின்ற பொலிஸ் பரிசோதகர் மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் நேற்றய தினம் (11) பொலிஸ் திணைக்களத்தால் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்று எமது சமூகத்திற்கு பெருமையினைச் சேர்த்துள்ளார். மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று 08, ஆலையடிவேம்பு பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1988.05.02 ஆந் தினம் இலங்கை பொலிஸ் சேவையில் உதவி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் பல நாட்களின் பின்னர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

வி.சுகிர்தகுமார்  ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை தடையின்றி மேற்கொண்டதுடன் அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது. அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் இருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றதுடன் பயணிகளும் பஸ் நிலையத்தில் காத்திருந்ததை காணமுடிந்தது. அரச அலுவலங்களில் இன்று காலை தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச சுகாதார வைத்திய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் சிறந்த விளைச்சலை பெற்றபோதும் – விற்பனை செய்ய முடியாமல் கவலையுடன் பெரும் நஷ்டத்தில்!!!

வி.சுகிர்தகுமார் சிறந்த விளைச்சலை நாம் பெற்றபோதும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடுகின்றோம். இதனால் நாம் பெரும் நஷ்டத்தினையும் எதிர்கொண்டுள்ளோம் என அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேட்டுநில பயிற்ச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கமும் விவசாய அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் பல்வேறுபட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகள் நலன் கருதி அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினால் பால்மா பைக்கற்றுக்கள் வழங்கிவைப்பு….

வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக தொழிலை இழந்த பல குடும்பங்களின் குழந்தைகள் நலன் கருதி பால்மா பைக்கற்றுக்ளை வழங்கும் பணியினை  அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் 70 குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை வழங்கி வைத்தனர். நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனை கருத்தில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி உலர் உணவுப்பொதி…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதி….

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 156 …

மேலும் வாசிக்க