Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் பல நாட்களின் பின்னர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் பல நாட்களின் பின்னர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

வி.சுகிர்தகுமார்

 ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை தடையின்றி மேற்கொண்டதுடன் அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது.

அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் இருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றதுடன் பயணிகளும் பஸ் நிலையத்தில் காத்திருந்ததை காணமுடிந்தது.

அரச அலுவலங்களில் இன்று காலை தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களினால் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதுடன் அரச அலுவலங்களில் தேவையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுமக்களும் அவரச தேவைகளின் நிமித்தம் சமூக இடைவெளியை பேணி தமது தேவைகளை நிறைவேற்றியதையும் காண முடிந்தது.

இதேநேரம் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொதுமக்களும் முகக்கவசங்களை அணிந்து பாதுகாப்பான முறையில் நடந்து கொண்டதையும் சில பிரதேசங்களில் இந்நிலை மீறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *