Latest News
Home / இலங்கை (page 215)

இலங்கை

கோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் காலங்களில் எந்தவிதத்திலும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். அத்துடன், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். சந்தையில் தோலுடனான கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 430 ரூபா என அவர் குறிப்பிட்டார். அதே கோழி இறைச்சி சதொசவில் 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பொருட்களின் …

மேலும் வாசிக்க

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!

சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் …

மேலும் வாசிக்க

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு ஈழம்!! வெளியானது தகவல்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரமும் மற்றுமொரு மாநிலம் அல்லது நாடு உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார். இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை. குறித்த சட்டத்தின் பிரகாரம், துறைமுக …

மேலும் வாசிக்க

அரசாங்கத்திற்கு பெரும் சவாலான ஜெனிவா விவகாரம்!

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த …

மேலும் வாசிக்க

புத்தாண்டின் பின்னர் திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள் -வெளியானது தகவல்

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார். இந்த ஆலோசனைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும். பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதை தாமதப்படுத்த முடியாது என்பதால் …

மேலும் வாசிக்க

மே மாதம் இலங்கைக்கு காத்திருக்கின்றது பேராபத்து!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் பெரிதும் புறக்கணித்ததை அடுத்து, மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ள என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக் காணலாம் என்று …

மேலும் வாசிக்க

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை வீரர்!!

இலங்கை விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார். அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் இந்த சாதனையை படைந்திருந்த …

மேலும் வாசிக்க

ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தினால் புற்றுநோய்!

ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தக்கூடியது என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அததெரணவிற்கு …

மேலும் வாசிக்க

நாளை விடுமுறை தினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு நாளைய (12) தினம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் …

மேலும் வாசிக்க