Latest News
Home / ஆலையடிவேம்பு (page 71)

ஆலையடிவேம்பு

தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

  “சிறந்த கல்வியின் ஊடாக முன்னேற்றகரமான சமூகம்” என்னும் தொனிப்பொருளில் கோளவில் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் 2020.08.22 ம் திகதி இன்று தி/கோ பெருநாவலர் வித்தியாலயத்தில் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்காக கொளவில் பிரதேச கல்விமான்கள் திரு .கா. விநாயகமூர்த்தி (பொறியியலாளர்) ,திரு . கா.பங்கயநாதன்( Gaphic Desi gner), திரு.வே .வாமதேவன்(சமூக ஆர்வலர்) அனுசரணை வழங்கியிருந்தனர்.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (23.08.2020) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் முதலாம் நாள் திருவிழாவின் காலை நிகழ்வுகள் இனிதே நடைபெற்று நிறைவடைந்தது.    

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY-2020 கிரிக்கெட் சுற்றுப்போட்டி போட்டி அட்டவணையுடன் இன்று ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் சுற்றுப்போட்டி இவ்முறையும் JOLLYBOYS CHAMPION’S TROPHY -2020 இன்றைய தினம் (22) கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இவ் போட்டித்தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் இவ் போட்டித் தொடரானது 24 கழகங்களை உள்ளடக்கிய அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட LEAGUE முறையிலான போட்டிகளாக இடம்பெற இருக்கின்றது. . போட்டிகள் அனைத்தும் தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் (DASA OVEL) …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான மகா கும்பாபிசேகம் 28ஆம் திகதி….

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா இம்மாதம் 28ஆம் திகதி காலை 6மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற இறைவன் திருவருள் கைகூடியுள்ளது. 24ஆம் திகதி அதிகாலை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலய பொதுக்கூட்டம் மற்றும் நிருவாகத்தெரிவும் வருகின்ற வெள்ளிக்கிழமை …

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்தின் பொதுக்கூட்டம் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (2020.08.21 ) காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது . மேலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலய புதிய நிருவாகத்தெரிவும் இடம்பெற உள்ளதாக அறியத்தருகின்றார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY-2020 கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 22ம் திகதி…..

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் JOLLYBOYS CHAMPION’S TROPHY -2020 கோலாகலமாக நடாத்தப்பட இருக்கின்றது. எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாக இருக்கும் போட்டித் தொடரானது 24 கழகங்களை உள்ளடக்கிய அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட LEAGUE முறையிலான போட்டிகளாக இடம்பெற இருக்கின்றது. நுழைவுக்கட்டணமாக 3000/- அறவிடப்பட இருப்பதுடன் வெற்றிபெறும் அணிகளுக்கு மாபெரும் வெற்றிகிண்ணமும் பிரமாண்டமான பணப்பரிசுகளும் அத்தோடு ஒவ்வொரு போட்டி முடிவிலும் MAN OF THE …

மேலும் வாசிக்க

Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இணையக்குழு உறுப்பினர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு…..

Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இணையக்குழு உறுப்பினர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (17) மாலை 5.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற மண்டபத்த்தில் Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இயக்குனர் M.கிரிசாந் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக சட்டத்தரணி K.ஜெயசுதன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் N.சுதாகரன் என்பவர்கள் வருகைதந்து நிகழ்வினை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் இணையக்குழு உறுப்பினர்களுக்கு …

மேலும் வாசிக்க

அம்பாரை தமிழ் மக்களை பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அணி திரட்டும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு – குழுவும் தெரிவு

வி.சுகிர்தகுமார் ‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனை கூட்டம் இன்று 16 ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் சுந்தரம் சிறிதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் கல்விமான்கள் அரச உயர் அதிகாரிகள்  புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும் நிகழ்வும் அறிமுக நிகழ்வும்

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிரோஜாதரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றதை தொடர்ந்து முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும் நிகழ்வும் அறிமுக நிகழ்வும் இன்று (15) பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற கருத்தறியும் ஒன்று கூடல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் மின்சார சபை அத்தியட்சகர், சட்டத்தரணிகள், கல்வி அதிகாரிகள் …

மேலும் வாசிக்க

பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையில்

வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள நாடு என்னும் ரீதியில் இலங்கை நாடும் உலகநாடுகள் மத்தியில் பேசப்படுவதுடன் பாராட்டினையும் பெற்று  வருகின்றது. இதற்கமைவாக தற்போது கிராமங்களிலும் கொரோனா தொடர்பான பிசிஆர் பரிசோதனை நடவடிக்கையினை சுகாதார திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க