Latest News
Home / ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு

மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதக்கங்கள் அதில் இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு 5 தங்கப்பதக்கம்….

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 9 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இதில் 5 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் மாதம் 9,10 ஆம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே 5 தங்கம் 2 வெள்ளி 2 …

மேலும் வாசிக்க

மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை எச்சரிக்கை!

-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மான் மற்றும் மரை இறைச்சிகள் எனும் பெயரில் குரங்கு இறைச்சிகளை மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதனை அறியக்கூடியதாக இருக்கிறது. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், வீடுகளில் சேமித்து வைத்திருத்தல், உணவுக்காக எடுத்துக் கொள்ளுதல் என எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில். மான், மரை போன்ற இறைச்சிகளை அதன் …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு….

பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இன்றைய தினம் (20) நீளம் தாண்டுதல் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி சிவகுமார் விபுர்சனா வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

மேலும் வாசிக்க

‘குருபிரதிபா பிரபா’ விருது பெற்ற அதிபர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன்….

கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் மற்றும் சமாதான நீதவானுமான திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்களின் சேவையைப் பாராட்டி இன்றைய தினம் (19) கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் ‘குருபிரதிபா பிரபா’ விருது வழங்கப்பட்டது. ‘குருபிரதிபா பிரபா’ விருதினை பெற்ற திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்கள் தற்போது திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக திறன்பட …

மேலும் வாசிக்க

தென்னிந்திய படைப்பான P.T.தினேஷ் இயக்கிய “தந்தை” குறும்படத்திற்கு அக்கரைப்பற்று S.கிருஷ்மன் இசையமைத்துள்ளார்….

தென்னிந்தியாவில் அப்பா மகன் உறவை மையமாக வைத்து P.T.தினேஷ் அவர்களால் உருவாக்கப்பட்ட “தந்தை” குறும்படம் இன்றைய தினம் (16) Youtube தளத்தில் வெளியிடப்பட்டு அனைவரது வரவேற்பை பெற்றுவருகிறது. குறித்த குறும்படத்திற்கான இசையினை எமது அக்கரைப்பற்றினை சேர்ந்த S.கிருஷ்மன் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பதும் சிறப்புக்குரியதாக அமைத்திருக்கிறது. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான P.T.தினேஷ் அவர்கள் குறும்படத்தை இயக்கியுள்ளார், படத்தில் பாடகர், இசையமைப்பாளர் S.கிருஷ்மன் அவர்களும் மற்றும் விஜய் டிவி பிக் பாஸ் போட்டியாளரான மோகன் …

மேலும் வாசிக்க

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று!

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று! ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்றைய தினம் (15.09.2023) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுவருகிறது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் பங்குகொண்டு வருவதுடன் தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் போது எவ்வாறு செய்யப்பட வேண்டும் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்!

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்றய தினம் (13.09.2023) செவ்வாய் கிழமை பாடசாலை அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது. குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் மூலமாக சபாநாயகர், பிரதமர், 10 அமைச்சர்கள், 10 பிரதியமைச்சர்கள் உட்பட மொத்தம் 95 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டதுடன். மாணவர்கள் மத்தியில் …

மேலும் வாசிக்க

கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவ – மாணவிகள் கரம் (Carrom) சுற்றுப்போட்டியில் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு…..

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கரம் (Carrom) போட்டிகளில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட செல்வி.K.ஜெனிற்றா, செல்வி.V.டில்ருக்சனி ஆகியோர் பெண்களுக்கான இரட்டையர் கரம் போட்டியில் முதலாம் இடத்தினையும், செல்வன்.M.மதுர்ஜன் அவர்கள் ஆண்களுக்கான ஒற்றையர் கரம் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கரம் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ – மாணவிகளுக்கும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளருக்கும் மேலும் சகல …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு…

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சனிக்கிழமை அன்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியிருந்தது. நேற்றய தினம் (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா மற்றும் முதலாம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றதுடன். இன்றைய தினம் (11/09/2023) இரண்டாம் நாள் திருவிழாவான சங்காபிஷேக திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக பாற்குட பவனியானது ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு….

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திருமதி. பாக்கியவதி கோவிந்தசாமி குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மேலும் வாசிக்க