Latest News
Home / Kirishanth admin (page 551)

Kirishanth admin

தமிழ் அரசியல் தலைமையை என்னிடம் தாருங்கள் – ஆனந்தசங்கரி!

தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது …

மேலும் வாசிக்க

திருமண வீட்டுக்கு சென்று குடும்பங்களை உடைப்பது குறித்து பேசிய ரணில்!

திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை மற்றும் உறவுகளை இணைக்கச் செய்யப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் கலந்துகொண்டு குடும்பங்களை உடைப்பது குறித்து பேசியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த உரையாடலை …

மேலும் வாசிக்க

உக்ரைன் விமானம் விபத்து: ஈரானுக்கு கனடா விடுத்துள்ள எச்சரிக்கை!

உக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் வெளிப்படைத் தன்மையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் …

மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத்தில் வாழும் தம்பதிகளுக்கு அடித்தது மகாயோகம்…மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால்…!

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்துள்ளார். …

மேலும் வாசிக்க

வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு – நாசா

விண்வெளியில்,பூமிக்கு அருகே வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா, ‘டெஸ்’  (TESS) என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம், விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் செல்கின்றனவா என்பதையும், அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டது. இந்த ஆய்வில், பூமியில் இருந்து, 100 ஒளி ஆண்டுகள் …

மேலும் வாசிக்க

ஐ.தே.க. வின் சில உறுப்பினர்கள் கோட்டாவுடன் இணைய இரகசியத் திட்டம் – மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் இரகசியமாக ஆளுங்கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மையை பெற்றுத்தர திட்டமிட்டு செயற்படுவதாக ஐ.தே.க.வின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லைபோல் தெரிகிறது. இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற …

மேலும் வாசிக்க

சிறுபான்மை கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாக முடியாது – சுமந்திரன்

சிறுபான்மை கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள உடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அந்த நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு எமது தலைவர் இரா.சம்பந்தனிடம் அழைப்பு விடுத்துள்ளார். திகதி வழங்கப்பட்டால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லுவோம். வடக்க மாகாணத்திற்கான புதிய ஆளுநருக்கு முழுமையான ஆதரவை வழங்கி …

மேலும் வாசிக்க

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது சுகாதார அமைச்சு!

காய்ச்சல், இருமல், தடிமன் என்பன சாதாரண நோய் அறிகுறி எனவும் புதிய வைரஸினால் ஏற்பட்ட அடையாளம் தெரியாத நோய் அல்ல எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்ப்ளுவென்சா நோய் பரவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன. இந்தநிலையில் இதுகுறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பருவப்பெயர்ச்சி மழையுடன் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும். எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் …

மேலும் வாசிக்க

மூன்றாவது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு புனேயில் ஆரம்பமாகவுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் மூன்றாவது போட்டி இன்றைய தினம் …

மேலும் வாசிக்க

ட்ரம்பிடமிருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரானுடன் போர் புரிவதையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக உலக நாடுகள் குற்றஞ்சுமத்தி வருகின்ற நிலையில், ட்ரம்பிடமிருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ட்ரம்ப், போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த அதிகாரத்தை பறிக்க அந்நாட்டு பிரதிநிதிகள் சபை தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் 3 பேர் அவருக்கு எதிராகவே …

மேலும் வாசிக்க