Latest News
Home / தொழில்நுட்பம் / வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு – நாசா

வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு – நாசா

விண்வெளியில்,பூமிக்கு அருகே வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா, ‘டெஸ்’  (TESS) என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம், விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் செல்கின்றனவா என்பதையும், அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டது.

இந்த ஆய்வில், பூமியில் இருந்து, 100 ஒளி ஆண்டுகள் துாரத்தில், ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ‘டி.ஓ.ஐ.,700டி’ என, விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது, பூமியை விட, 20 சதவீதம் பெரிதாக காணப்படுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தை, 37 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

 

சூரியனிடம் இருந்து, பூமி பெறும் வெப்பத்தில், 86 சதவீதத்தை, புதிய கோள் பெறுகிறது. இக்கோள், அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவிலோ அல்லது நெருங்கியோ இல்லாமல் உள்ளதால், பூமியை போல, தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நாசா விஞ்ஞானிகள், புதிய கோளின், மூன்று மாதிரிகளை உருவாக்கி, ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, டெஸ் செயற்கைக் கோள், ‘டி.ஓ.ஐ., 700 பி, சி, டி.,’ என்ற மூன்று கோள்களை கண்டுபிடித்துள்ளது. இதில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்தான், பூமிக்கு நெருக்கமான அம்சங்களுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *