Latest News
Home / ஆலையடிவேம்பு / விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ள அக்கரைப்பற்று ஜங்பிளவர் அணிக்கு சொந்தமானதொரு மைதானத்தை நாமல் ராஜபக்சவின் உதவியோடு பெற்றுத்தருமாறு கழக உறுப்பினர்களினால் கோரிக்கை….

விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ள அக்கரைப்பற்று ஜங்பிளவர் அணிக்கு சொந்தமானதொரு மைதானத்தை நாமல் ராஜபக்சவின் உதவியோடு பெற்றுத்தருமாறு கழக உறுப்பினர்களினால் கோரிக்கை….

வி.சுகிர்தகுமார்  

பலவருடகாலமாக சொந்த மைதானமின்றி விளையாடி பல சாதனைகளை படைத்துள்ள ஜங்பிளவர் அணிக்கு சொந்தமானதொரு மைதானம் இல்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அதனை பெற்றுத்தருமாறும் அக்கரைப்பற்று ஜங்பிளவர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனுடனான சந்திப்பொன்றின்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

தமது கழகத்தின் மைதான அபிவிருத்தி தொடர்பில் தாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுடன் இணைந்து தமது கழகம் பயணிக்கும்; என உறுதி அளித்தனர்.

 

மேலும் இச்சந்திப்பின் போது ஜங்பிளவர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த கிருத்திகன் இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என் தெரிவித்தார்.

அவ்வாறு இணைந்து செயற்படுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன்; ஜங்பிளவர் விளையாட்டுக்கழகத்தின்; தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என அவரால்; உறுதிமொழி வழங்கப்பட்டது.

அத்தோடு நிட்யமாக கழகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிந்தவரையிலான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.

இதேநேரம் கழகங்களும் நன்றி மறவாமல் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனவும் கேட்க்கொண்டார்.

இச்சந்திப்பில் ஓய்வு பெற்ற அதிபர் க.தட்சணாமூர்த்தி உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *