Latest News
Home / உலகம் / வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஐக்கிய அரபு அமீரகம்!

வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஐக்கிய அரபு அமீரகம்!

செவ்வாய் கிரகம் செல்லும் வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்தை, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவியுள்ளது.

ஹோப் என்று அழைக்கப்படும் இந்த விண்கலம் ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 6:58 மணிக்கு, இந்த விண்கலம் H2-A ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஏவுதல் நாட்டின் மிக லட்சிய விண்வெளி திட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இது செவ்வாய் கிரகத்தின் வானிலையை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது.

இந்த ஆய்வு அடுத்த ஏழு மாதங்களாக தொடரும். இந்த விண்கலம், 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில், செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு நீளமான சுற்றுப்பாதையில் தன்னை இணைக்க முயற்சிக்கும்.

அமெரிக்க வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.

கொலராடோபல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், டுபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *