Latest News
Home / விளையாட்டு / பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: சோபியா- இகா மகுதடத்திற்கான இறுதிப் போட்டியில் மோதல்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: சோபியா- இகா மகுதடத்திற்கான இறுதிப் போட்டியில் மோதல்!

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், சோபியா கெனின் மற்றும் இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்களுக்கான முதல் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனினும், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சோபியா கெனின் கடுமையாக போராடி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இரண்டாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக், அர்ஜென்டீனாவின் நதியா பொடோரொஸ்காவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் இகா ஸ்வியாடெக், எளிதாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், இரு வீராங்கனைகளும் முதல்முறையாக கிண்ணத்துக்கு முத்தமிடும் ஆர்வத்தில் மோதவுள்ளனர்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *