Latest News
Home / விளையாட்டு / அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வென்றது.

ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டிம் டேவிட் 54 ஓட்டங்களையும் கேமரூன் கிறீன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், சஹால் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 69 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டேனில் சேம்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ்வும், தொடரின் நாயகனாக அக்ஸர் பட்டேலும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *