Latest News
Home / ஆலையடிவேம்பு (page 63)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை! எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை மீறி செயற்படுவோர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம்

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் நேற்றுமுதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. மேலும் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டதுடன் அரச திணைக்களங்கள் வங்கிகள் பகுதியளவில் திறக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் …

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சம்பந்தமான அறிவித்தல்!

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6.00 மணிதொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. இத்தகவலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மேலும் பரிசோதனை

வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார். இதனடிப்படையில் இன்று அக்கரைப்பற்று மத்திய சந்தை பிரதேசத்தில் மக்களின் வருகையினை மட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்ட அவர்கள் அங்கு பரிசோதனை நடவடிக்கையினை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை ஆரம்பமானது!

வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிர்வாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (25) நேர்முகப் பரீட்சை ஆரம்பமானதுடன் டிசெம்பர் 2ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சையில் …

மேலும் வாசிக்க

பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி!

வி.சுகிர்தகுமார்    அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்  முன்னெடுத்துள்ளது.கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்பணியானது நீரோட்டம் போதுமானதாக இல்லாத காரணத்தால் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இருப்பினும் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினை தவிர்ப்பதற்காக உரிய நேரத்தில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது. இதேநேரம் பனங்காட்டுப்பாலத்தின் கீழாக மாத்திரமன்றி தில்லையாற்றின் பெரும்பாலான …

மேலும் வாசிக்க

சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு சமூகம்!

வி.சுகிர்தகுமார் கொரோனா இரண்டவாது அலை ஏற்பட்டு பாடாசலைகள் மூடப்பட்டு சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (23) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். இதற்கமைவாக இன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளித்ததை காண முடிந்தது. பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் மாணவர்கள் யாவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதை அவதானிக்க முடிந்தது. …

மேலும் வாசிக்க

அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள்:ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன்…

வி.சுகிர்தகுமார் அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் சிந்தனையோடும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள். அப்போதே நாம் சுகதேகிகளாக வாழ முடியும் என ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன் கூறினார். கல்வி அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்பினையுடைய பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னாயத்த கலந்துரையாடல்கள் வலய கல்வி மட்டங்களில் இடம் பெற்று வருகின்றன. இதற்கு அமைவாக அம்பாரை மாவட்டம் திருக்கோவில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்படும் வடிக்கான்களை துப்பரவு செய்யும் பணிகள்

வி.சுகிர்தகுமார்  மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கின் தாக்கமும் அதிகரிக்கலாம் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை விழிப்பூட்டி வருகின்றது. இந்நிலையில் நீர்தேங்கி நிற்கும் ஆலையடிவேம்பு பிரதேச வடிக்கான்களை துப்பரவு செய்யும் மிகவும் முக்கியமான பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரனின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பிரதான …

மேலும் வாசிக்க

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்    அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைவாக கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு  இன்று இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் …

மேலும் வாசிக்க