Latest News
Home / ஆலையடிவேம்பு (page 19)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம்….

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அக்கரைப்பற்று, விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் திரு K.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர்) அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவையினால் …

மேலும் வாசிக்க

மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை விழா…..

(செல்வி) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் 2023 ம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (11) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்பத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி ஜோய் காந்திமதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக திரு s. விவேகானந்தராஜா உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம் திருக்கோவில் மற்றும் திரு p.மோகனதாஸ் வெளிக்கள …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று – பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான திருக்கொடியேற்றப் பெருவிழா- 2023 விஞ்ஞாபணம்.

இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும். இத்தலத்தின் வருடாந்த திருக்கொடியேற்றப் பெருவிழா நிகழும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் நாள் திங்கட்கிழமை (27.03.2023) பூர்வபக்க சப்தமித் திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய பகல் 9.14 முதல் 10.40 வரை உள்ள மணியளவில் வரும் சுபவேளையில் ஆரம்பமாகும். 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை …

மேலும் வாசிக்க

மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் திறந்துவைப்பு….

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 5000 ற்கு மேற்பட்ட பெண்களைக் கொண்டு 30 வருடங்களாக இயங்கி வரும் வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கமானது, இச்சமூக மக்களின் நலன் கருதி புத்தாக்க செயற்ப்பாடாக சங்கத்தின் கெளரவ தலைவி திருமதி.பி.மங்கையர்க்கரசி அம்மணி அவர்களின் தலைமையில் (09.03.2023) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் மிகவும் சிறப்பான முறையில் திறந்து வைக்கப்பட்டது. …

மேலும் வாசிக்க

GIT பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நாளை மறுதினம்….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணிவரை GIT பாட பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு வளவாளர் சதித்ராஜ் அவர்களால் இடம்பெறவுள்ளது. மேற்படி “GIT” EXAM நான்கு வருடங்களாக பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப்படாமல் இருந்தது. தற்போது 2019,2020,2021,2022(2023) வருடங்களுக்கான மாணவர்களுக்கான பரீட்சையை நடாத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காட்டுயானை அட்டகாசம்: தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம் புரிந்துவருகின்ற நிலையில் இதற்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரக்கோரி பொதுமக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வியாழக்கிழமை (09) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் …

மேலும் வாசிக்க

கண்ணகி கிராமத்தில் காட்டுயானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கையும்! விசனமும்….

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம். கண்ணகி கிராம பகுதியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்துவருவதுடன் குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் மக்கள் குடியிருப்பு பகுதியில் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமிக்கு முன்பாக கார் விபத்து!

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், திடிரென பிராதான வீதியின் சாலையின் குறுக்கு வழியில் முச்சகர வண்டியொன்று வீதியைக் கடந்த சாந்தப்பத்தில். முச்சகர வண்டியுடனான விபத்தை தடுக்கும் நோக்கில், சாரதி தடையைப் பிரயோகித்துள்ளார். இதே நேரம் குறித்த கார் வீதியை விட்டு விலகி தடம் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு மூவரின் விளக்கமறியல் நீடிப்பு…!

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில் கடந்த (28.02.2023) இடம்பெற்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவியிருந்தது. இந்தத் …

மேலும் வாசிக்க

திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் (02) ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 05 ஆம் தர …

மேலும் வாசிக்க