Latest News
Home / இலங்கை / கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கருணா கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கருணா கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரைவாக நடவடிக்கை வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார்.


பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது கல்முனை உப பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்த வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாத நிலையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் அதை இன்று ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்து பத்து வருடகாலமாகியும் கூட கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்தப்படாமைக்கான ஆக்கப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லாமை கவலையளிக்கிறது என அமைச்சர் தன்னிடம் கூறியதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சரிடம் கடந்த அரசின் பாரபட்ச செயற்பாடாகவே இதனை பார்ப்பதாகவும், தற்போதைய நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு கல்முனை உபபிரதேச செயலகம் விரைவாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
கல்முனை நகரைச் சுற்றியுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை உபபிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. இதற்காக பல போரட்டங்கள் மேற்கொண்ட போதும் அரசு அதை செவிசாய்க்கவில்லை என்றும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

இதையடுத்து, அரசாங்கம் என்பது மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது ஆகும். தொடர்ச்சியாக மக்களை இவ்விடயத்தில் ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல. எனவே, உடனடியாக எமது அரசு தலையிட்டு தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *