Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று பொது மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி இன்று (16) முன்னெடுப்பு…..

அக்கரைப்பற்று பொது மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி இன்று (16) முன்னெடுப்பு…..

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதான பணி இன்றைய தினம் (16) ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் முறையான திட்டமிடலுடன் அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

சிரமதான பணியில் அக்கரைப்பற்று மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம், ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தன்னார்வமாக இணைந்து சிரமதான பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் சிரமதானப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான காலை உணவை வழங்கி இருந்தனர்.

பொது மயானமானது நீண்டகாலமாக பராமரிப்பற்ற நிலையில் முட்புதர்கள், பற்றைக் காடுகள், கற்கள் என்பனவற்றோடு குப்பைகளும் நிறைந்து காணப்பட்டு வந்த நிலையில்.

இதனை அவதானித்த ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானப்பணியை முன்னெடுத்து  மயானத்தை துப்பரவு செய்து தூய்மையாக்கி இருக்கிறார்கள்.

சிரமதானப்பணி இடம்பெறுவதற்கான ஒத்துழைப்பை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் பிரதேச சபை செயலாளர் சுரேஸ்ராம் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *