Latest News
Home / ஆலையடிவேம்பு / YMHA premier league – 2023 கிரிக்கட் சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் Ganthi Challengers அணி வெற்றிவாகை சூடியது…..

YMHA premier league – 2023 கிரிக்கட் சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் Ganthi Challengers அணி வெற்றிவாகை சூடியது…..

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் நேற்று மற்றும் இன்றைய தினம் அக்கரைப்பற்று, தர்மசக்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வந்ததுடன்.

சுற்றுத்தொடரில் Barathy Strickers மற்றும் Ganthi Challengers ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் பங்குகொண்டதுடன் Ganthi Challengers அணிவெற்றிவாகை சூடியது.

மேலும் குறித்த சுற்றுத்தொடரில் Barathy Strickers தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டதுடன், இறுதிப்போட்டியின் சிறப்பாட்ட நாயகனாக Ganthi Challengers அணியின் தலைவர் அஜித் அவர்களும் தெரிவாகி இருந்தார்.

மேலும் குறித்த ”YMHA premier league – 2023” கிரிக்கட் சுற்றுத்தொடர் அக்கரைப்பற்று, விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழா எதிர்வரும் 29 ஆம் இடம்பெற இருக்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கிண்ணங்கள் உத்தியோக பூர்வமாக அக்கரைப்பற்று, விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழா நிகழ்வின் போது அதிதிகளால் வழங்கி வைக்கப்படவும் இருக்கின்றது.

 

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *