Latest News
Home / ஆலையடிவேம்பு (page 9)

ஆலையடிவேம்பு

நாவற்காடு பகுதியில் வீடொன்று எரிந்து தீக்கிரை, உடமைகள் அனைத்தையும் இழந்திருக்கும் குடும்பம்!!!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு, பல்தேவைக்கட்டிடத்திற்கு அருகாமை வீதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று (02) எரிந்து தீக்கிரை. குறித்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் காலையிலேயே கணவன் வழமை போன்று தொழிலுக்கும், மனைவி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த அயலவர்கள் முயற்சித்த போதிலும் வேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீடு எரிந்து …

மேலும் வாசிக்க

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கோலாகலமாக பாடசாலையில் இடம்பெற்றது. “எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் சிறுவர்களே” எனும் தொனிப் பொருளின் கீழ் நடாத்தப்பட்ட நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய சமூகத்திற்கு செய்திகொடுப்பதற்காக சிறு ஊர்வலம் ஒன்று நடைபெற்றதுடன் …

மேலும் வாசிக்க

ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்த அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம்!!

அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினர் ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்து பெருமை சேர்த்துள்ளார்கள். தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி இரண்டாம் இடத்தை அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது. மேலும் இன்றைய தினம் (30) களுவாஞ்சிகுடி உதயதாரகை கழகத்தினரினால் நடாத்தப்பட்ட கிரிகெட் சுற்றுத்தொடரின் காலிறுதி ஆட்டத்திற்காக பின் …

மேலும் வாசிக்க

மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் கிண்ணம் பெற்றது…

தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலான மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றய தினம் (29) அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி வெற்றிக்கிண்ணத்தை தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன். திறம்பட விளையாடி சுற்றுத்தொடரின் இரண்டாம் இடத்தை எமது அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த …

மேலும் வாசிக்க

கண்ணகி கிராம மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கிவைப்பு…..

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு செல்வதற்கு நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 90 மில்லியன் முதற்கட்ட வேலைக்காக ஒதுக்கப்பட்டு கடந்த 04.03.2021 அன்று ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் நிதி நெருக்கடிகள் காரணமாக குறித்த வேலைத்திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருவதுடன் பலரினதும் முயற்சியால் பகுதியளவிலான வேலைகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் ”பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் ஊடாக புதிய பஸ் வண்டி!

அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி ஒன்றினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்க இருக்கிறார். ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற …

மேலும் வாசிக்க

மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதக்கங்கள் அதில் இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு 5 தங்கப்பதக்கம்….

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 9 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இதில் 5 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ் மாதம் 9,10 ஆம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே 5 தங்கம் 2 வெள்ளி 2 …

மேலும் வாசிக்க

மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை எச்சரிக்கை!

-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மான் மற்றும் மரை இறைச்சிகள் எனும் பெயரில் குரங்கு இறைச்சிகளை மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதனை அறியக்கூடியதாக இருக்கிறது. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், வீடுகளில் சேமித்து வைத்திருத்தல், உணவுக்காக எடுத்துக் கொள்ளுதல் என எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில். மான், மரை போன்ற இறைச்சிகளை அதன் …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு….

பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் இன்றைய தினம் (20) நீளம் தாண்டுதல் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவி சிவகுமார் விபுர்சனா வெள்ளிப் பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும், வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

மேலும் வாசிக்க