Latest News
Home / ஆலையடிவேம்பு (page 90)

ஆலையடிவேம்பு

கோடீஸ்வரன் ஆலையடிவேம்பு இராம திகோ/இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அம்பாறை, ஆலையடிவேம்பு திகோ/இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை …

மேலும் வாசிக்க

இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர் தலைமையின் ஆலையடிவேம்பு பிரதேச குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாழ்வாதார தேவை உடைய குடும்பத்திற்கு இன்று (13) வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தையல் இயந்திரம் மற்றும் அரிசி உட்பட ஏனைய அத்தியாவசிய உணவுப்பொருட்களும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் தலைமையின் கீழ் வழங்கப்பட்டது இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும் வாசிக்க

பங்களாதேசில் இலங்கை சார்பிர் பதக்கம் வென்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை தமிழ் மாணவன்…

பங்களாதேசில் இடம் பெற்ற தெற்காசிய காரத்தே போட்டியில் பாடசாலை மட்ட 21 வயதிற்கு உட்பட்ட கனிஸ்ட்ட பிரிவில் 67 kg நிறையில் இலங்கை சார்பில் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் இருந்து பங்குபற்றிய கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சோதிஸ்வரன் ரிஷோபன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.குறித்த மாணவன் ராம் கராத்தே சங்க மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேசில் இடம்பெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட …

மேலும் வாசிக்க

அகில இலங்கை சமாதான நீதவானாக சண்முகநாதன் யோகானந்தன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். …

அக்கரைப்பற்று 8/2 பொது வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் யோகானந்தன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அக்கரைப்பற்று மேலதிக நீதவான் திரு.பி.சிவகுமார் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக 2019/11/06 இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)யில் தொழிநுட்ப பீட ஆய்வு கூட உதவியாளராக பணியாற்றிவரும் இவர் அப்பாடசாலையிலே ஆரம்பக் கல்விமுதல் உயர்தரக் கல்விவரை கல்வி கற்றுள்ளார். …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி(தே.பா) மாணவன் கராட்டி போட்டியில் கலந்துகொள்ள வங்களாதேஸ் பயணம்…

பாடசாலை மட்ட 21 வயதிற்கு உட்பட்ட கனிஸ்ட்ட பிரிவில் 67 kg நிறையில் குமித்தி போட்டியில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சோதிஸ்வரன் ரிஷோபன் 2019/11/08 அன்று வங்களாதேசில் நடைபெறவிருக்கும் குமித்தி போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக 2019/11/06 புதன் கிழமை காலை 9.15 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 ,O/L மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு குறிப்புக்களின் தொகுப்பு பிரதி செய்து வழங்கப்பட்டது: ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் பாடசாலையின் தேவைகள்.

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய 10 மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களை O/L பரீட்சைக்கு இற்கு தயார் படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு இலவசமாக வரலாறு பாடத்திற்கான சிறப்பு குறிப்புக்கள் அடங்கிய தொகுப்பு திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து பிரதி செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை மாணவர்கள் கல்வியில் ஆர்வம் உள்ள சிறந்த மாணவர்களாக இருக்கின்ற போதினும் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு

முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை இன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் ஆறு நாட்கள் உணவின்றியும் ஒருவேளை உணவருந்தியும் முருகனை நினைத்து விரதமிருப்பார்கள். அந்த வகையில் இன்றைய தினம்(2019.11.02 )ஆலையடிவேம்பு வள்ளி …

மேலும் வாசிக்க

2019 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற சைவசமய பரீட்சை

அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் இன்று (02.11.2019) சனிக்கிழமை தரம் 3ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்பு மாணவர்களுக்கு சைவசமய பரீட்சை இந்து மாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம்(ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) மற்றும் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பங்களிப்புடனும் வலய கல்வி அதிகாரிகளின் அனுமதியுடனும் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் 30 இற்கு அதிகமான …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்புவெப் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள் அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர். காலை மற்றும் மாலை வேளையில் பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் …

மேலும் வாசிக்க

பதவியுயர்வு பெற்றுச்செல்லும் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமை ஆற்றிய சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டர் அவர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கான புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராக (AO/GN) பதவியுயர்வு பெற்று நாளை பதவியேற்கவுள்ளார். இவர் கடந்த 1993.03.02 ஆம் திகதியன்று கிராம உத்தியோகத்தராக எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இணைந்து 26 ½ வருடங்கள் சீரிய சேவையாற்றி, கிராம உத்தியோகத்தர் சேவையிலுள்ள சிரேஷ்ட அலுவலர்களை அதிசிறப்பு (Supra) …

மேலும் வாசிக்க