Latest News
Home / ஆலையடிவேம்பு (page 8)

ஆலையடிவேம்பு

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கிவைப்பு….

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியில் இன்றைய தினம் (17/10/2023) தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வு ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் K.கவிதா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வு தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு முதற்கட்டமாக பதினைந்து இலட்சம் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (15) ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரப்பெருவிழா நிகழும் சோபகிருது வருடம் புரட்டாதித்திங்கள் 28ம் நாள் (15-10-2023) ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை சுபமுகூர்த்த சுபவேளையில் கங்கையரட்டுதல் நிகழ்வுடன் ஆலயத்தில் கணபதி ஹோமமும் இடம்பெற்று மாலை அம்மனின் திருக்கதவு திறத்தலுடனும் பெருவிழா ஆரம்பமாக இருக்கிறது. மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (25.10.2023) காலை இடம்பெற இருப்பதுடன் மற்றும் ஆயுத பூசையுடனும் இப் பெருவிழா இனிதே நிறைவடையவும் இருக்கின்றது.  

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை (15) அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்…..

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ விழா இடம்பெற இருக்கிறது. மேலும் ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (24.10.2023) காலை 05.30 மணிக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (06) வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலமாக வைத்தியசாலையில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் குறித்த சிரமதான பணியினை அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் 1000 மாணவர்களுக்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை….

அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் அனுசரணையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முன்னோடிப் பயிற்சி பரீட்சை ஒன்று இன்றைய தினம் (05) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் தெரிவு செய்யப்பட்ட பல பாடசாலைகளில் இடம்பெற்றது. குறித்த பரீட்சை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற பாடசாலைகளின் அனைத்து தரம் 05 மாணவர்களையும் உள்ளடக்கியதாக அண்ணளவாக ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். அக்கரைப்பற்று தெற்கு பிரதேச கல்வி வலுவூட்டல் ஒன்றியத்தின் …

மேலும் வாசிக்க

திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) அதிபர் திரு.M. தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்களும் , விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பாடசாலை Epsi திரு.M.யோகராஜா, Dr. S.அகிலன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. W.M.B.விஜயதுங்க பண்டார …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) புதன்கிழமை அதிபர் திரு.JR.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும்: பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பும்.…

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று, திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த (02) திங்கட்கிழமை அன்று அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் சிறுவர்களுக்கான கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான மதிய போசனம் என்பனவும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த நிகழ்வுடன் இவ்வருடம் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல எதிர்பர்க்கும் மாணவர்களை …

மேலும் வாசிக்க

திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (03) அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக மாணவர்கள் மகிழ்வடையும் வண்ணம் இடம்பெற்றது. ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும்  தொனிப்பொருளில் மாணவர்கள் பங்கு பற்றிய சிறு ஊர்வலம் ஒன்றும் காலை வேளையில் ஏற்பாடு செய்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலை கலாசார அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான …

மேலும் வாசிக்க

நாவற்காடு பகுதியில் வீடொன்று எரிந்து தீக்கிரை, உடமைகள் அனைத்தையும் இழந்திருக்கும் குடும்பம்!!!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் நாவற்காடு, பல்தேவைக்கட்டிடத்திற்கு அருகாமை வீதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று (02) எரிந்து தீக்கிரை. குறித்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் காலையிலேயே கணவன் வழமை போன்று தொழிலுக்கும், மனைவி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கும் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தீ ஏற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்படுத்த அயலவர்கள் முயற்சித்த போதிலும் வேகமாக பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீடு எரிந்து …

மேலும் வாசிக்க